விண்டோஸ் திரையை மாற்றுவது எப்படி?
இதை Bootskin என்ற மென்பொருள் மூலம் மிகவும் இலகுவாக செய்யலாம்.இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுங்கள். பின்பு இம் மென்பொருளை Open செய்து அதிலுள்ள உங்களுக்கு விருப்பமான படத்தை தெரிவுசெய்து Apply செய்வதன் மூலம் பழைய விண்டோஸ் திரையை மாற்றலாம்.ஒருவேளை உங்களுக்கு இங்கிருக்கும் படங்கள் பிடிக்கவில்லை என்றால் Brows bootskin Library என்பதன் மூலம் வலைப்பக்கத்திலிருந்து மேலதிகமாக படங்களை Download செய்து பயன்படுத்தலாம்.
மென்பொருள் தரவிறக்க: Bootskin
விண்டோசில் டிரைவுகளின் பெயரை மாற்றுவது எப்படி?
Mycomputer ஜ RightClick செய்து Manage என்பதில் click செய்யுங்கள் அப்போது கீளுள்ளது போன்று ஒரு Dialog box Open ஆகும்.
அதிலுள்ள Disk management என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினியிலிருக்கும் Drive கள் காட்டப் படும். இதில் நீங்கள் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் Drive ற்கு பெயரைமாற்ற முடியாது. மற்றய Drive களிற்கு மாற்றம் செய்யலாம். நீங்கள் மாற்ற விரும்பும் Drive ன் மீது வைத்து Right Click செய்யுங்கள். (நான் இங்கு D: Drive ஜ பெயர் மாற்றம் செய்கிறேன்) அப்போது கீளுள்ளது போன்று ஒரு Dialog box Open ஆகும்.
அதில் Change Drive Letter and Paths என்பதை கிளிக் செய்யுங்கள். அப்போது கீளுள்ளது போன்று இன்னொரு Dialog box Open ஆகும்.
அதில் Change என்ற Button ஜ கிளிக் செய்யுங்கள். அப்போது கீளுள்ளது போன்று இன்னொரு Dialog box Open ஆகும்.
இதில் Assing the following driver letter என்பதற்கு எதிரே உள்ள Compo box ல் உள்ள முக்கோண அம்புக்குறியை அழுத்துங்கள். அப்போது வெளிப்படும் List ல் உங்களுக்கு விருப்பமான எழுத்தை தெரிவுசெய்து Ok Button ஜ அழுத்துங்கள். (நான் இங்கே N ஜ தெரிவுசெய்துள்ளேன்.) வரும் Message ல் Ok Button ஜ மறுபடியும் அழுத்துங்கள்.
இப்போது பெயர் மாற்றப் பட்டிருக்கும்.
உங்களுக்குத் தேவையான மின்னுல்களை Download செய்துகொள்ள
உங்களுக்குத் தேவையான எந்தவகையான மின்புத்தகங்களையும் நீங்கள் www.Scribd.com எனும் வலைத்தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் இத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்வதற்கு நீங்கள் இத்தளத்தின் உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியமாகும்.
நீங்கள் இத்தளத்திலிருந்து மின்புத்தகங்களை .PDF கோப்பாகவோ அல்லது .TXT கோப்பாகவோ Download செய்து கொள்ளலாம். மின்புத்தகங்களை Download செய்ய முற்படுகையில் உங்களுடைய Username ஜயும் Password ஜயும் இவ் வலைத்தளம் கேட்கும். அவ்வேளையில் உங்களுக்கு புதிதாக உறுப்பினராக சேர்ந்து கொள்ள தாமதங்கள் ஏற்படலாம். இந்த சிக்கல்களை தவிர்த்துக் கொள்வதற்காக நீங்கள் கீளுள்ள Username,Password ஜ பயன்படுத்தி இலகுவாகவும் காலதாமதமின்றியும் புத்தகங்களை Download செய்யுங்கள்.
Username ஆக Scribdmenan என்பதையும்
Password ஆக Scribd என்பதையும் பயன்படுத்துங்கள்.
விண்டோசில் றியிஸ்ரி என்றரல் என்ன?
இந்த றியிஸ்ரில் மாற்றம் செய்வதன்மூலம் நாம் பலவாறான மாற்றங்களை விண்டோஸில் ஏற்படுத்தமுடியும். உதாரணமாக
♠ Start பட்டனிலுள்ள Start என்பதற்குப் பதிலாக நமக்கு விருப்பமான பெயரை இடலாம்.
♠ கணினி On ஆகி விண்டோஸ் Loading ஆகும் போது உங்களுடைய பெயர் வரும்படி செய்யலாம்.
♠ Recycle bin ற்கு பெயரை மாற்றலாம்.
♠ மை கம்யூட்டரில் உள்ள floppy டிரைவையோ அல்லது வேறு டிரைவுகளையோ மறைக்க முடியும்.
♠ இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் பின்னனியை மாற்றலாம்.
♠ இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் பெயரை மாற்றலாம்.
♠ Display properties ஜ மறைக்க முடியும்.
♠ Control panel ஜ மறைக்க முடியும்.
♠ Start மெனுவின் வேகத்தை கூட்ட முடியும்.
♠ விண்டோஸ் மூலம் டொஸ்ஸிற்கு செல்வதை தடுக்கலாம்.
♠ Shortcut களின் அடியிலிருக்கும் வளைந்த அம்புக்குறிகளை அளிக்கலாம்.
இவற்றைப்போன்று பல்வேறு ஜாலங்களை றியிஸ்ரியில் மாற்றங்கள் செய்வதன்மூலம் புரியலாம்.ஆனால் இவற்றைச் செய்யும்முன்னர் நீங்கள் றியிஸ்ரியை Backup எடுத்துவைத்தல் அவசியமாகும் ஏனெனில் தற்சமயம் நீங்கள் மாற்றம் செய்யும் போது ஏதாவது தவறு ஏற்பட்டுவிடின் இது பயன்படும்.
றெயிஸ்ரியை Backup செய்து கொள்ள.
Start -> Run -> Regedit
இப்படி றியிஸ்ரியை திறந்து பைல் மெனுவிலுள்ள Export என்பதை கிளிக் செய்து Save செய்யவேண்டிய இடத்தைக் காட்டி இதற்கு ஒரு பெயரை வளங்கி அதற்கு அடுத்ததாக Export range என்பதில் All என்பதை தெரிவு செய்து Save செய்தால் போதும்.
பைனரி இலக்க முறை
Binary Number System என்பது நமது கணினி பயன்படுத்தும் ஒரு இலக்க முறையாகும்.இந்த இலக்க முறை 2 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட இலக்கமாகும். அதாவது இந்த number system ல் 1,0 ஆகியவையே அடிப்படையாகக் காணப்படும்.
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் இலக்க முறை Decimal Numbers என அழைக்கப்படும். இதேபோலவே கணினி பயன்படுத்தும் இலக்கமுறை Binary Numbers என அழைக்கப்படும்.
சாதாரணமாகவே நாம் 100 என்று டைப் செய்தால் கணினி அதை நேரடியாகப் புரிந்து கொள்ளாது. அவ் இலக்கத்தை தனது Binary இலக்கப்படி 1100100 என்று மாற்றியே புரிந்து கொள்கிறது.
இப்படியே நாம் எதை உள்ளீடு செய்தாலும் Binary Number ஆக மாற்றியே அறிந்து கொள்கிறது. இதேபோலவே நமது பைல்கள், தகவல்கள் அனைத்துமே இப்படியாக மாற்றப்பட்டே சேமிக்கப்படுகிறது.
Decimal இலக்கத்தை Binary இலக்கமாக ஆக மாற்றுவது எப்படி ?
உதாரணமாக 30 என்ற இலக்கத்தை எப்படி Binary க்கு மாற்றுவது என்று பார்ப்போம்.
30 ஜ 2 ஆல் பிரியுங்கள் ஏனெனில் Binary Number இன் அடி 2 ஆகும்.
ஆகவே 30 என்று நாம் டைப் செய்யும்போது கணினி 11110 என்று மாற்றியே புரிந்து கொள்கிறது.
இதேபோல 50 என்று டைப் செய்தால் கணினி 110010 என்று மாற்றம் செய்கிறது.
ISO பைல் என்றால் என்ன?
இந்த ஐ.எஸ்.ஓ பைலை, பகுதி பகுதியாகப் பொருத்தி ஒன்று சேர்க்கும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைத் தாஙகி வரும் ஒரு பெட்டிக்கு ஒப்பிடலாம். எமக்கு பயன்படுவது அந்தப் பெட்டிக்குள் அடங்கிருப்பவையே தவிர அந்தப் பெட்டியல்ல. ஐ.எஸ்.ஓ பைல்களும் இதே போன்றதே.
அதிக கொள்ளளவு கொண்ட மென்பொருள்களை இனையத்தின் வழியே பகிர்வதற்காகவே ஐ.எஸ்.ஓ பைல்கள் அனேகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மென்பொருளுக்குரிய அனைத்து பைல்களும் போல்டர் களும் ஒரே பைலுக்குள் அடங்கி விடுவதாலும் இதன் மூலம் பைல் இழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனாலும் ஐ.எஸ்.ஓ பைலாக அவை இணையத்தில் பகிரப்படுகின்றன. உதாரணமாக 600 மெகாபைட்டுக்கு மேல் கொள்ளளவு கொண்ட லினக்ஸ் இயங்குதளத் தின் உபுண்டு பதிப்பு இணையத்தில் இருந்து டவுன் லோட் செய்து கொள்ளக் கூடியதாக ஐ.எஸ்.ஓ பைல் வடிவிலேயே கிடைக்கிறது.
ஐ.எஸ்.ஓ பைலில் என்ன அடங்கிIருக்கின்றன என நேரடியாகத் திறந்து பார்க்க விண்டோஸில் வழியில்லை. எனவே அவை வேறு வழிகளிலேயே கையாளப்படு கின்றன. அவற்றுள் முதலாவது வழி ஐ.எஸ்.ஓ பைலை கையாள்வதற்கான யூட்டிலிட்டிகளைப் பயன்படுத்துவதாகும். அதற்கென IsoBuster, CDmage ,Daemon Tools எனச் சில யூட்டிலிட்டிகலைப் பிற நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐ.எஸ்.ஓ பைலில் அடங்கியுள்ளவற்றை “சிப் பைல்” போல் வெறொரு போல்டருக்குள் விரியச் செய்து பார்க்கலாம்.
இரண்டாவது வழி அதனை சீடியிலோ அல்லது டிவிடியிலோ பதிவு செய்து பயன்படுத்துவதாகும். அனேகமாகப் பலரும் இந்த வழியையே கையாள்கின்றனர். எனினும் இந்த ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்வதென்பது வழமையான டேட்டா அல்லது வீடியோ பைலை பதிவு செய்வது போன்றதல்ல. இங்கு சீடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள் ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் ஒன்று சேர்த்துப் பொருத்த வேண்டியிருக்கிறது. எனவே சீடியில் பதிவு செய்வதற்கான மென்பொருளில் ஐ.எஸ்.ஓ இமேஜ் பைலைப் பதிவு செய்வதற்கான வசதியும் (image burner ) இருந்தாலே அதனைப் பதியலாம்.
ஒரு ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்த பிறகு சீடியில் அந்த பைலைக் காண முடியாது. மாறாக சீடியில் வேறு சில பைல்களையும் போல்டர்களையும் மட்டுமே காணக் கூடியதாய் இருக்கும்.
ஐ.எஸ்.ஓ பைலைக் கையாளும் மூன்றாவது வL அதனை ஒரு வேர்ச்சுவல் சீடி ரொம்மில் ஏற்றிப் பார்வையிடுவதாகும். ஒரு சீடி ரொம்மிலிருந்து மட்டுமே இயங்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்களை இயக்குவதற்கான ஒரு வழியே இந்த வேர்ச்சுவல் சீடி ரொம். Virtual CD-ROM Control Panel for Windows XP என்பது அவ்வாறான ஒரு இலவச யூட்டிலிட்டி.
ஐ.எஸ்.ஓ பைல்களை உருவாக்கவும் சிடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள்களே உதவுகின்றன. ஒரு சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் டேட்டாவை ஐ.எஸ்.ஓ பைல் வடிவில் சேமித்துக் கொள்வதன் மூலம் அந்த சிடி அல்லது டிவிடி இல்லாமலேயே பிரிதொரு நேரம் அதனை சிடியில் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்த ஐ.எஸ்.ஓ பைல் தருகிறது.
நன்றி:அனுப்புடன் ஒரு வலம்
வலைப்பக்கத்தை Desktop பாக மாற்றுவது எப்படி?
Coding:
src ="http://www.google.com"
width="100%" height="100%">
குறிப்பு: எனது பக்கத்தில் HTML Tags ஜப் போட முடியவில்லை.
உங்கள் எழுத்துக்களை Backward ஆக மாற்றிப் பெற
விரும்பிய Format க்கு பைல்களை மாற்றுதல்
நீங்கள் விரும்பும் அனைத்து பைல்களையும் ஒன்லைனில் வைத்தே விரும்பிய Format மாற்றிக் கொள்ளலாம் இது முற்றிலும் இலவசமானதும் கூட. நீங்கள் எவ்வித மென்பொருளையும் உங்கள் கணினியில் நிறுவத் தேவை இல்லை.
சென்று செய்து பாருங்கள்...
Folder மறைக்க வித்தியாசமாக ஒரு முறை
படிமுறை 02:திறந்துள்ள Notpad ல் கீழே உள்ள Coding ஜ எழுதுங்கள். அல்லது இதை Copy செய்து Notepad ல் Paste செய்யுங்கள்.
Coding:
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}" goto
UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}"attrib +h +s "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}"echo Folder locked
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}"ren "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}" Lockerecho Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
படிமுறை 03:
இப்போது உங்கள் Notepad கீழே படம் 03 ல் உள்ளதைப்போல காணப்படும்.
அடுத்ததாக File Menu இலுள்ள Save as என்பதன் முலம் Save செய்யுங்கள்.
படம் 04 ல் உள்ளதைப் போல உங்களுக்கு விருப்பமான பெயரில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் Save செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் Save செய்யும் பெயருடன் .bat என்று சேர்த்து எழுதுங்கள். இங்கே பெயர் மாறுபட்டாலும் அடுத்து வரும் .bat என்பதே முக்கியமாகும்.இங்கே நான் எனது பெயரிலேயே Desktop ல் Save செய்கிறேன்.
படிமுறை 04:
அடுத்து நீங்க Save செய்த File படம் 05 ல் உள்ளதைப் போல காணப்படும்.
அதை Double Click செய்யுங்கள்.
இப்போது படம் 06 ல் உள்ளதைப்போல பழைய File ற்கு அருகிலேயே Locker என்னும் பெயருடன் புதிதாக ஒரு File உருவாகுவதைக் காணலாம்
படம் 06
இனி நீங்கள் உங்களுடைய பிற File களை அப் Folder ற்குள் இட்டுவிட்டு மறுபடியும் முதலில் உருவாக்கிய File ஜ Double click செய்யுங்கள்.
இப்போது படம் 07 ல் உள்ளதைப் போல ஒரு dialog box தோன்றும்.
அதிலே இந்தப் Folder ஜ Lock செய்ய வேண்டுமா என கேட்கும்.நீங்கள் Y என்று டைப் செய்து Enter key ஜ அழுத்த Locker என்னும் பெயருடைய அந்தப் Folder மறைக்கப் பட்டுவிடும்.
மீண்டு Folder ஜ பெறுவதற்கு மறுபடியும் பழைய File ஜ Double click .
படம் 08 ல் உள்ளதைப்போல ஒரு Dialog box தோன்றும்.
அதில் ஏதாவது இலக்கத்தை டைப் செய்து Enter அழுத்த மறுபடியும் Locker என்ற Folder ஜ பெறலாம்.
நீங்கள் அடிக்கடி பார்க்கும் இணையத்தளம் ஒன்றுக்கு Shortcut ஒன்றை உருவாக்கும் முறையை அறிவீர்களா?
# அடுத்து அவ் இணையப் பக்கத்தில் link எதுவும் இல்லாத இடத்தில் வைத்து Right click செய்யுங்கள்.
# அப்போது கிடைக்கும் Contact menu வில் Create shortcut என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
# இப்போது ஒரு Dialog box தோன்றும் அதிலே Yes என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
# இப்போது உங்கள் Desktop ல் அவ் இணையப் பக்கத்திற்கான Shortcut உருவாக்கப் பட்டிருக்கும்.
# இத்துடன் Shortcut உருவாக்கும் வேலை முடிந்தது.
Turn off மெனுவிலுள்ள button கள்.
இவற்றில் முதலாவதாகக் காணப்படுவது Stand by என்ற button ஆகும். இந்த buttonனின் பயன்பாடு என்னவெனில் நாம் ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம் திடீரென்று வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. இப்போது தான் இந்தக் கீயின் உதவி நமக்குத் தேவை. அதாவது நாம் வெளியில் செல்லும்போது கணினியை அப்படியே விட்டுச் சென்றால் மின்சாரம் அதிகமாக வீணாகிவிடும். அல்லது பைலை சேவ் செய்து கணினியை நிறுத்திவிட்டுச் சென்றால் மீண்டும் வந்து on செய்யும்போது மறுபடி on ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். இந்நேரத்தில் தான் நாம் இதைப் பயன்படுத்த வேண்டும். அதாவது பைலை சேவ் செய்து கணினியை இந்த stand by mode ல் வைத்துச் சென்றால் மின்சாரம் வீணாகாது, மீண்டும் on செய்யத் தேவை இல்லை keyboard ல் ஏதாவது ஒரு button ஜ அழுத்தினாலே போதும் உடனடியாகவே கணினி இயங்க ஆரம்பித்து விடும். இதனால் வேலையும் இலகுவாகி விடும். மின்சாரமும் சேமிக்கப்படும்
அடுத்தாகக் காணப்படுவது Turn off என்ற button ஆகும். இதன்மூலம் கணினியை நிரந்தரமாக off செய்ய முடியும். அதாவது நாம் கணினியை இரவு off செய்து விட்டு காலையில் on செய்தல்.
இறுதியாகக் காணப்படுவது Restart என்ற button ஆகும். அனேகமாக நாம் இந்த button ஜ அடிக்கடி பயன்படுத்துவது குறைவு. கணினி சிலவேளைகளில் ஸ்தம்பித்து நின்றுவிடும் நேரங்களில் இதைப் பயன்படுத்துவோம். இந்த button அழுத்தும்போது நமது கணினி ஒருதடவை தானாகவே off ஆகி உடனேயே on ஆகும். மேலும் இந்த button நாம் ஏதாவது Softwareஜ நிறுவினாலும் பயன்படுத்துவோம்.
கணினி
ஓப்ரேட்டிங் சிஸ்டம் (Operating System) பற்றி
கணினியுடன் தொடர்புபட்ட சில சொற்களும் அவற்றுக்கான விபரமும்
2, ALU : Arithmetical Logical unit
3, D RAM : Dynamic Random Access Memory
4, VGA : Video Graphic Adapter
5, DOS : Disk Operating System
6, DPT : Dot Per Inch
7, FAT : File Allocation Table
8, FDD : Floppy Disk Drive
9, GUI : Graphical User Interface
10, HDD : Hard Disk Drive
11, HTTP : Hyper Text Transfer Protocol
12, ISDN : Integrated Service of Digital Network
13, LAN : Local Area Network
14, MAN : Metro Area Network
15, CAN : Campus Area Network
16, MPEG : Motion Pictures Expert Group
17, NOS : Network Operating System
18, RGB : Red Green Blue
19, RDBMS : Relational Database Management System
20, SIMM : Single Inline Memory Module
21, URL : Uniform Resource Locator
22, WAN : Wide Area Network
23, WOS : Workstation Operating System
24, XML : Extensible Markup Language
25, SVM : System Virtual Machine
26, FMS : File Management System
27, GPRS : General Pocket Radio Service
28, CGA : Color Graphics Adapter
29, GEN : Global Education Network
30, NC : Network Computer
Blogspot என்றால் என்ன என்று நீங்கள் அறிவீர்களா ?
யுனிக்கோட்
அதாவது ஒரு கணினியில் வைத்து யுனிக்கோட்டில் எழுதினால் மற்றய கணினியில் யுனிக்கோட் எழுத்துரு இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த எழுத்துருவே இப்போது இணையத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் தமிழ்யுனிக்கோட் எழுத்துருவைப் பயன்படுத்தி தமிழில் எதை எழுதினாலும் அது ஆங்கில மொழிக் கணினியானாலும் அல்லது யப்பானிய மொழிக் கணினியானாலும் சரி அல்லது பிரஞ்சு மொழிக் கணினியானாலும் சரி எந்த மொழிக் கணினியிலும் நாம் எழுதியது தமிழ் மொழியில் தான் தெரியும். இது எப்படிச் சாத்தியமாகிறது எனில் நாம் யுனிக்கோட்டில் எழுதும்போது அது ஒரு சாதாரண எழுத்துருவாக இல்லாமல் அந்த எழுத்துக்கள் அப்படியே குறியீடுகளாக மாற்றப்படுகிறது இதனால்தான் எந்த மொழிக்கணினியிலும் இவற்றால் பிரச்சனை ஏற்படுவதில்லை.
நாமும் நமது கணினியில் இந்த எழுத்துருவைப் பயன்படுத்தலாம். அதற்காக நாம் நமது கணினியில் சில Settings செய்யவேன்டும்
நமது கணினியில் யுனிக்கோட்டை செயற்படுத்தும் முறையை அறிந்து கொள்ள கணினிக் கிறுக்கன் என்பதைக் கிளிக் செய்யுங்கள்
யுனிக்கோட் பற்றிய மின்பாடத்தின் முலம் யுனிக்கோட் எழுத்துரு பற்றி விரிவாக அறிந்து கொள்ள தமிழ் யுனிக்கோட் செய்யுங்கள்.