Printer ஒன்றை Install செய்வது எப்படி?

1. முதலில் -> Control panal -> Printers and Faxes என்பதைக் கிளிக் செய்யுங்கள் அப்பொழுது கீழுள்ளது போன்று Printers and Faxes Open ஆகும்


2. இங்கே ஏற்கனவே இரண்டு printer கள் Install செய்யப் பட்டுள்ளன மூன்றாவதாக printer ஒன்றை Install செய்ய வேண்டுமாயின் Step 02 நீல செவ்வகத்தில் காட்டியவாறு Add a Printer என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்



3. பின்பு Next என்பதைக் கிளிக் செய்யுங்கள்

4. அடுத்து Local printer attached to this computer என்ற முதலாவது option Button ஜ தெரிவு செய்து Next Button ஜ கிளிக் செய்யுங்கள். இதற்குக் கீழுள்ள Automatically detect and install my plug and play printer என்ற Check button tick செய்ய வேண்டாம். ஏனெனில் இதைக் கிளிக் செய்தால் உங்கள் computer ரே printer ஏதாவது இணைக்கப் பட்டுள்ளதா என்று சரிபார்க்கும். இதனால் நேர விரயம் ஏற்படும்.



அதற்குக் கீழுள்ள Option Button ஜ Network printer ஒன்றை நிறுவுவதாயின் மட்டுமே தெரிவு செய்ய வேண்டும். நாம் இப்போது நிறுவப் போவது ஒரு சாதாரண Printer ரே அதனால் நீங்கள் முதலாவது option Button ஜ தெரிவு செய்தாலே போதும் பின்பு Next என்ற Button ஜ கிளிக் செய்யுங்கள்.


5. Next Button ஜ கிளிக் செய்ததும்; Step 05 ல் உள்ளதுபோல் ஒரு Dialog Box தோன்றும். இதிலே Use the Following port என்பதற்கு நேரே உள்ள Drop down box ல் சிவப்பு சதுரத்தால் காட்டப்பட்டுள்ள அம்புக் குறியை கிளிக் செய்து வரும் மெனுவில் உங்கள் printer எந்த Port ன் வழியாக கணினியுடன் இணைகிறதோ அதை தெரிவு செய்ய வேண்டும்.



பின்பு Next ஜ கிளிக் செய்யுங்கள்.


இப்போது Step 07 ல் உள்ளது போன்ற ஒரு Dialog Box தோன்றும் அதிலே Manufacture என்பதில் தயாரிப்பாளர்களின் list ம் Printers என்பதில் பிரிண்டர்களின் மொடல்களும் காணப்படும். நீங்கள் உங்களுக்குத் தேவையான பிரிண்டரை Manufacture என்பதில் தேர்ந்தெடுத்தால் அந்தப் பிரிண்டரிலுள்ள மொடல்கள் Printers எனும் பெட்டியில் காட்டப்படும் அதிலிருந்து உங்கள் பிரிண்டரின் சரியான மொடல் இலக்கத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதற்கான Driver ஜ நிறுவிக் கொள்ளலாம்..


இந்த List களில் உங்கள் பிரிண்டரிற்குரிய சரியான Driver மென்பொருள் இல்லையென்றால் பிரிண்டர் வாங்கும் போது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட CD ஜ உங்கள் CD Rom ல் இட்டுவிட்டு Step 08 ல் சிவப்பு வட்டத்தால் காட்டப்பட்டுள்ள Have Desk என்ற Button ஜ அழுத்துங்கள் அப்போது Step 09 ல் படம் 01 ல் காட்டப்பட்டுள்ளது போன்ற ஒரு சிறிய Dialog box தோன்றும் அதிலுள்ள Brows என்ற button ஜ Click செய்யுங்கள் உடனே படம் 02 ல் உள்ளதுபோன்ற ஒரு Dialog Box தோன்றும் அதில் பச்சை செவ்வகத்தால் காட்டப்பட்டுள்ள Look in என்னும் பெட்டியிலுள்ள அம்புக்குறியை கிளிக் செய்து உங்கள் CD ஜ காட்டி Open Button ஜ அழுத்துவதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம்.



அந்த List களில் உங்கள் பிரிண்டரிற்குரிய Driver மென்பொருள் இருந்தால் Step 10 ல் HP பிரிண்டரின் ர்P HP Deskjet 600 என்ற பிரிண்டர் நிறுவப் படுவதைப் போல் தேர்ந்தெடுத்து Next Butto ஜ அழுத்துங்கள்.

அடுத்து Step 11ல் உள்ளதுபோல் ஓரு Dialog Box தோன்றும் அதிலே உங்கள் பிரிண்டரிற்கான பெயரைக் கொடுத்து Do you want to use this printer as the default printer என்பதற்கு Yes என்பதை தெரிவு செய்து Ok ஜ அழுத்துங்கள்.





அடுத்து வரும் Dialog Box ல் Do not share this printer என்பதை தெரிவுசெய்து Next ஜ கிளிக் செய்யுங்கள். உங்கள் கணனி மற்றய கணனிகளுடன் Network ல் இணைந்திருந்தால் Share Name என்பதை தெரிவுசெய்து அதற்கு ஒரு பெயரை கொடுத்து இந்த பிரிண்டரை நெடவெர்க்கில் Share செய்யலாம்.

அடுத்து வரும் Dialog Box ல் Do you want to print a test page என்பதற்கு Yes என்பதை கொடுத்து Next ஜ Click செய்தால் பிரிண்டர் நிறுவப்பட்டதற்கு உறுதியாக ஒரு paper print செய்யப் படும். அடுத்து Finish என்பதை கிளிக் செய்யுங்கள்.

Finish ஜ அழுத்தியதும் Printers and faxes என்பதில் நீங்கள் கொடுத்த பெயருடன் உங்கள் பிரிண்டர் நிறுவப்பட்டிருக்கும்.


Sendto மெனு வில் உங்களுடைய போல்டெர் ஜ சேர்ப்பது எப்படி?



முதலில் உங்களுக்குத் தேவையான Drive ல் ஒரு Folder ஜ உருவாக்கிக் கொள்ளுங்கள்

Folder உருவாக்குதல்
Step 01) - தேவையான இடத்தில் வைத்து Right Click செய்யுங்கள்
- கிடைக்கும் மெனுவில் Folder என்பதை தெரிவு செய்யுங்கள்





Step 02) - அந்த Folder ற்கு விரும்பிய பெயரைக் கொடுத்து Rename செய்யுங்கள்




இப்போது Folder உருவாக்கியாகி விட்டது. அடுத்து

Start Button ஜ Click செய்து Run என்பதை Click செய்யுங்கள்

- இப்போது Step 03 ல் உள்ளது போல் ஒரு Dialog Box வெளிவரும் அதிலே
- Sendto என்று Type செய்து Ok Button ஜ Click செய்யுங்கள்



Ok Button ஜ Click செய்ததும் Step 04 ல் உள்ளது போல் Sendto என்ற பெயரில் ஒரு Window Open ஆகும்



இங்குதான் நாம் முதலில் உருவாக்கிய Folder ஜ யும் சேர்க்கப் போகிறோம்

இப்போது முதலில் உருவாக்கிய Folder ஜ Copy செய்யுங்கள்




அடுத்து Open செய்து வைத்துள்ள Sendto என்ற Folder ல் Step 06 ல் உள்ளது போல் Right Click செய்து Past Shortcut என்பதை மாத்திரம் Click செய்யுங்கள்



இப்போது Step 07 ல் உள்ளதுபோல் Shortcut to Menan என்பது போல் உள்ள Folder ன் பெயரை Rename செய்யுங்கள்.




Icon ன் தோற்றத்தை மாற்ற

நீங்கள் விரும்பினால் இந்த அம்புக்குறியுடன் கூடிய Folder Icon ஜ Right click செய்து properties என்பதை Click செய்து வரும் Dialog box ல் Shortcut என்ற tab ஜ Click செய்து அதிலுள்ள Change Icon என்ற Button ஜ Click செய்யும் போது வரும் Icon கள் அடங்கிய Dialog Box ல் இருந்து ஒரு Icon ஜ தேர்ந்தெடுத்து மாற்றிக் கொள்ளலாம்







இப்போது அனைத்து வின்டோக்களையும் மூடிவிடுங்கள்

இப்போது ஏதாவது ஒரு File ஜ Right Click செய்து Send to மெனுவை பாருங்கள் உங்கள் Folder ம் காணப்படும். உங்கள் Folder ஜ தெரிவு செய்தால் நேரடியாக உங்கள் Folder ற்கே File Copy செய்யப் பட்டு விடும்.

CD ஒன்றை Image file ஆக Save செய்தல்



Nero மென்பொருளை open செய்து அதிலுள்ள
1.Copy and Backup என்பதை கிளிக் செய்யுங்கள
2.பின்பு அதற்குக் கீளுள்ள Copy CD என்பதை கிளிக் செய்யுங்கள்

இப்போது ஒரு Dialog Box தோற்றமளிக்கும்



Destination drive என்பதற்கு எதிரே உள்ள பெட்டியிலுள்ள அம்புக்குறியை அழுத்துங்கள் அப்போது தோன்றும் list ல் உள்ள Image Recorder என்பதை கிளிக் செய்யுங்கள்



அடுத்ததாக அடியிலுளள Copy என்பதை கிளிக் செய்து



ஏற்ற பெயரைக் கொடுத்து Save செய்து கொண்டால் சரி



Copy செய்து முடிந்ததும் கீழுள்ள Dialog Box வெளிவரும் Ok செய்து Nero வை விட்டு வெளியேறுங்கள்.



இப்போது நீங்கள் Save செய்த File கீழுள்ளது போல் காணப்படும்.





CD ஜ Image கோப்பாக Save செய்து வைப்பதால்

•இந்த File ன் Extention .nrg என காணப்படும்
•இப்படி சேமித்து வைப்பதால் File ற்கு வைரஸ் தாக்கம் ஏற்படாது
•இப்படி சேமித்து வைப்பதால் இந்த CD ல் உள்ள வேறு எந்த துணைப் பைல்களும் அளிக்கப்படும் சந்தர்ப்பம் குறைவு
•இந்த File ஜ Double Click செய்து நேரடியாக Blank CD ல் பதிந்து கொள்ளலாம்
•Save செய்து பராமரிப்பது இலகு.

உங்கள் கம்ப்யூட்டரில் “NTLDR missing, press ctrl + alt + delete to Restart” என்று வந்தால்....




உங்கள் கம்ப்யூட்டரை Start செய்யும் போது "NTLDR missing, press ctrl+alt+delete to Restart” என்று வந்தால் என்ன செய்வீர்கள்?

NTLDR என்பது New Technology loader என்பதாகும். கம்ப்யூட்டர் Start ஆகும்போது BIOS ஆனது Harddrive ன் Active Partition MBR க்கான முதலாவது Sector ஜ Read செய்யும் பின்புதான் மற்ற Os பகுதிகள் Loading ஆகும். MBR ஆனது NTLDR ற்கு point செய்யப்பட்டுள்ளது. ஆகவேதான் NTLDR , Ntdetect.com போன்ற பூட்டிங் பைல்களில் ஏதாவது பிழை ஏற்படும் போதுதான் மேற்கூறிய Error message வருகிறது.

இப்படி பிரச்சனை வரும்போது விண்டோஸை புதிதாக நிறுவாதீர்கள் ஏனெனில் இப்படிச் செய்தால் நீங்கள் "My document" ல் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பைல்களும் அளிந்துவிடும். இந்தப் பிரச்சனைக்கு சிறந்த வளியொன்று உள்ளது.

•முதலில் கம்ப்யூட்டரை "Restart" செய்யுங்கள்
•பின்பு கம்ப்யூட்டரை 'விண்டோஸ் CD' மூலம் பூட்டிங் செய்யுங்கள்
•சிறிது நேரத்தில் Taskbar , Enter=Continue , R=Rapier , F3=Quit போன்றவற்றைக்
கொண்ட திரை தோன்றும்
•அப்போது 'R' என்பதை அளுத்துங்கள் பின்பு
•1 Windows என்பதும் அதற்குக்கீழ் Which windows installation would you like to log onto (to cancel, press Enter)? காணப்படும் இதில் 1 ஜ அளுத்துங்கள்.
•பின்பு உங்கள் “Administrator” பாஸ்வேடைக் கொடுத்து “Log on” செய்யுங்கள்.
•இனி C:\Windows> என்பதில் கீழுள்ள Code ஜ Type செய்யுங்கள்

Copy E:\I386\NTLDR C:\
Copy E:\I386\NTDETECT.COM C:\

என்று Type செய்து Enter செய்தால் சரி.

இனி Exit எனறு Type செய்தால் இதை விட்டு வெளியேறலாம். அல்லது 'Restart' செய்யுங்கள். இப்போது உங்கள் பிரச்சனை சரியாகிவிடும்.

குறிப்பு : இங்கு C என்பது “CD Rom Drive” ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் CD Rom Drive ஆக எது உள்ளதோ அதைக் கொடுத்தால் சரி.

குறிப்பு : இங்கு E என்பது எனது கம்ப்யூட்டரில் விண்டோஸ் install செய்துள்ள Drive ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் எந்த Drive ல் விண்டோஸ் install செய்துள்ளீர்களோ அதைக் கொடுத்தால் சரி.

இந்த இரண்டையும் சரியாகக் கொடுப்பது மிகவும் அவசியம்.

வலைப்பதிவு (Blog) ஒன்றை உருவாக்குவது எப்படி?




உங்களிற்கென்று என்று ஒரு வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. இதைப்பற்றி முழுமையாக அறிந்துகொண்டால் போதும். நீங்கள் உங்களிற்கென்று ஒரு வலைப்பதிவை வைத்திருப்பதன் மூலம் உங்களுடைய திறமைகளை வெளியுலகிற்கு மிகவும் இலகுவாக தெரியப்படுத்த முடியும். ஆனால் இதைப்பற்றி இ வலைப்பதிவு உருவாக்குவதைப் பற்றி எப்படி அறிந்துகொள்வது? உங்களுக்காக நான் வலைப்பதிவு உருவாக்கம் பற்றி ஒரு மின்னூலை கீழே தந்துள்ளேன் இதை Download செய்து வலைப்பதிவு உருவாக்கம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். பின்பு உங்களிற்கென்று ஒரு வலைப்பதிவு ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.

இப்புத்தகத்தில் ஏதாவது தவறுகள் இருப்பின் அவற்றை எனது மின்னஞ்சலிற்கோ அல்லது Comment ஆகவோ எனக்கு தெரிவியுங்கள்.

எனது மின்னஞ்சல் : menathas@gmail.com

Download செய்ய இங்கே Click செய்யுங்கள்.

சில சுருக்கக் சொற்களும் அவற்றிற்கான விளக்கமும்



1. DLL - Dynamic link library
2. INF - Information
3. Xml - extension Markup Language
4. CSS - Cascading Style Sheet
5. Asp - Active Server Page
6. Exe - executable
7. NIC - Network Interface Card
8. USB - Universal Serial Bus
9. Url - Uniform Resource Locator
10.IPW - Internet Properties Window
11.OLE - Object Linking and Embeding
12.CD - Compact Disk
13.IBM - International Business Machine
14.SMS - Short Message Service
15.IC - Integrated Circuit
16.WOS - Workstation Operating System
17.ABI - Application Binary Interface
18.NNTP - Network News Tran spar Protocol
19.SMTP - Simple Mail Tran spar Protocol
20.DSTP - Data space Tran spar Protocol
21.SQL - Structured Query Language
22.WAP - Wireless Application Protocol
23.IP - Internet Protocol
24.ALU - Arithmetical Logical Unite
25.PDF - Portable Document Format
Web Statistics