Turn off மெனுவிலுள்ள button கள்.

நாம் கணினியை Start-> turn off என்பதன் மூலம் off செய்ய முயலும் போது மேலே இருப்பதுபோல் மூன்று button களைக் கொண்ட dialog box ஒன்று தோன்றுகிறதல்லவா. இதைப்பற்றி அறிந்து கொள்வோம்.




இவற்றில் முதலாவதாகக் காணப்படுவது Stand by என்ற button ஆகும். இந்த buttonனின் பயன்பாடு என்னவெனில் நாம் ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம் திடீரென்று வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. இப்போது தான் இந்தக் கீயின் உதவி நமக்குத் தேவை. அதாவது நாம் வெளியில் செல்லும்போது கணினியை அப்படியே விட்டுச் சென்றால் மின்சாரம் அதிகமாக வீணாகிவிடும். அல்லது பைலை சேவ் செய்து கணினியை நிறுத்திவிட்டுச் சென்றால் மீண்டும் வந்து on செய்யும்போது மறுபடி on ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். இந்நேரத்தில் தான் நாம் இதைப் பயன்படுத்த வேண்டும். அதாவது பைலை சேவ் செய்து கணினியை இந்த stand by mode ல் வைத்துச் சென்றால் மின்சாரம் வீணாகாது, மீண்டும் on செய்யத் தேவை இல்லை keyboard ல் ஏதாவது ஒரு button ஜ அழுத்தினாலே போதும் உடனடியாகவே கணினி இயங்க ஆரம்பித்து விடும். இதனால் வேலையும் இலகுவாகி விடும். மின்சாரமும் சேமிக்கப்படும்








அடுத்தாகக் காணப்படுவது Turn off என்ற button ஆகும். இதன்மூலம் கணினியை நிரந்தரமாக off செய்ய முடியும். அதாவது நாம் கணினியை இரவு off செய்து விட்டு காலையில் on செய்தல்.









இறுதியாகக் காணப்படுவது Restart என்ற button ஆகும். அனேகமாக நாம் இந்த button ஜ அடிக்கடி பயன்படுத்துவது குறைவு. கணினி சிலவேளைகளில் ஸ்தம்பித்து நின்றுவிடும் நேரங்களில் இதைப் பயன்படுத்துவோம். இந்த button அழுத்தும்போது நமது கணினி ஒருதடவை தானாகவே off ஆகி உடனேயே on ஆகும். மேலும் இந்த button நாம் ஏதாவது Softwareஜ நிறுவினாலும் பயன்படுத்துவோம்.

1 comment:

Anonymous said...

நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
இதில் இன்னுமொரு ஆப்ஷனும் புதைந்துள்ளது. அதாவது ஷிப்டு கீ - ஐ அழுத்தினால் "ஹைபர்நேட்" எணும் ஆப்ஷன் தெரியும்.
கீழே உள்ள சொடுக்கை பின்பற்றினால் மேலும் விபரம் அறியலாம்.
ஹைபர்நேட் செய்வது எப்படி?

உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

Web Statistics