இலவச இணையத்தள சேமிப்பகம் (Free web hosting) பெறுவது எப்படி?



  • இணையத்தள சேமிப்பகம் (Web hosting) என்றால் என்ன என தெரியாதவர்கள் இந்தப் பந்தியை வாசிக்கலாம்.


இணையத்தளங்களை இணையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தினையே இணையத்தள சேமிப்பகம் அல்லது இணைய வழங்கி (Web hosting) என அழைக்கப் படுகிறது. உதாரணமாக நாம் நமது கணினியிலுள்ள உலாவி (Browser) யில் google.com என்ற அதனுடைய முகவரியை (Address) டைப் செய்து Enter key ஐ அழுத்தும்போது கீழோகாட்டப் பட்டுள்ளது போன்று கூகிளினுடைய இணயத்தளப் பக்கம் நமக்குக் காட்டப்படுகிறது இதேபோன்று நாம் எந்த இணையத்தளத்தை பார்க்க வேண்டுமானாலும் அதனுடைய முகவரியை பாவித்துப் பார்க்கலாம்.  




இவ்வாறு இணயத்தங்களை உலகின் எப்பாகத்திலிருந்தும் மக்கள் பார்வையிடுவதற்காக  அதற்கேற்ற வகையில் அந்தந்த இணயத்தளங்களின் உரிமையாளர்கள் பொதுவான ஒரு சேமிப்பகத்தில் சேமித்து வைத்திருப்பார்கள் அவ்வாறான சேமிப்பகங்களையே (Hosting) என அழைக்கப்படுகிறது. 

நீங்கள் உங்களுக்கென சொந்தமாக ஒரு இணையத்தளத்தை நடாத்த அல்லது அமைக்க வேண்டுமானால் நீங்கள் உங்களுக்கென ஒரு சேமிப்பகத்தை ( Hosting space)கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். இதற்கான சேமிப்பகத்தை (Hosting space) ஐ வழங்குபவர்களிடம் நாம் மாதாந்த அல்லது வருடாந்த அடிப்படையில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான Hosting Space ஐ பல நிறுவனங்கள்  பல அளவுகளில் விற்பனை செய்கின்றன.  கீழேயுள்ள உதாரணத்தைப் பாருங்கள்.


  •  இவ்வாறாதொரு Hosting Space ஐ இலவசமாகப் பெறுவது எப்படி ?
கீழே உள்ள லிங்கைப் பயன்டுத்தி இலவச சேமிப்பகம் வழங்கும் இணையத்தளத்திற்கு செல்லுங்கள்




சென்றதும் படத்தில் நீல வட்டத்தால் காட்டப்பட்டுள்ளது போன்று  Close Button ஐ அழுத்தி சிறிய விண்டோவை மூடுங்கள்





பின்பு படத்தில் காட்டப் பட்டுள்ளது போல் Sign Up என்பதை Click செய்து புதிய கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள்.





பின்பு கீழே கூறப்பட்டுள்ளபடி தகவல்களை வழங்குங்கள்.




  1. இல 1 ல் நீங்கள் ஏற்கனவே முகவரி (Domain name) ஒன்றை சொந்தமாக வைத்திருந்தால் அதை கொடுக்கலாம் அப்படி உங்களிடம் இல்லையெனில் இல 2 ற்கு செல்லுங்கள்

  2. இல 2 ல் உங்கள் பெயரையோ அல்லது நீங்கள் ஆரம்பிக்கவிரும்பும் பக்கத்தின் பெயரையோ எழுதுங்கள்.

  3. இல 3 ல் உங்களுடைய பெயரை எழுதுங்கள்.
  4. இல 4 ல் உங்களுடைய e-mail address  எழுதுங்கள்.
  5. இல 5 ல் நீங்கள் விரும்பும் Password ஐ எழுதுங்கள்.
  6. இல 6 ல் பெட்டிக்கு மேலுள்ள எண்களைப் பார்த்து சரியாக எழுதுங்கள்.
  7. இல 7 ல் காட்டப்பட்டுள்ள சிறிய Check box ஐ டிக் செய்து விடுங்கள்
  8. இனி இல 8 காட்டும் Create my account என்பதை Click செய்யுங்கள்.

Click செய்தபின்னர் உங்களுக்கு இலவசமாக ஒரு இணையத்தள சேமிப்பகம் (Hosting Space) கிடைத்துவிடும். பின்னர் கீழே காட்டப்பட்டுள்ளது போன்று ஒருபக்கம் காட்சியளிக்கும். 




Domain எனும் பெட்டிக்குள் நீங்கள் உருவாக்கிய சேமிப்பகத்திற்கான முகவரியும் (இந்த முகவரியில் தான் உங்களுடைய இணையத்தளம் இயங்கும்) 

Status என்பதில் உங்களுடைய  அக்கவுண்ட் இயக்க நிலையில் உள்ளதா எனும் தகவலும் (இங்கு நன் Open செய்த முகவரி இன்னமும் செயற்பட ஆரம்பிக்கவில்லை என்பதையே Account verification in progress, check again in 24 hours என்று காட்டுகிறது. இதற்கு சிறிது நேரம் தேவைப்படலாம்.

Action என்பதில் உங்களுடைய Account ஐ Setup செய்வதற்கான Link ம் காணப்படும். 

நீங்கள் உங்களுடைய e-mail அக்கவுண்டை திறந்து www.000webhost.com எனும் முகவரியிலிருந்து வந்திருக்கும் e-mail ல் உள்ள லிங்கை கிளிக் செய்து Confirm செய்து விட்டால் சரி.

பின்பு உங்களுடைய 000webhost account ற்கு சென்று Action என்பதிலுள்ள Setup account அல்லது Re setup account என்பதை கிளிக் செய்து நீங்கள் உருவாக்கிய Account ஐ Setup செய்யுங்கள் இதன்போது உங்களுக்கு உங்களுடைய FTP Account ற்கான யூசர்நேம் மற்றும் பாஸ்வேட் தரப்படும் அந்த விபரங்களை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இத்தோடு உங்களுடைய அக்கவுண்ட் Active ஆகிவிடும். ஆகிய பின்பு இவ்வாறு காட்சியளிக்கும்.


A, இதில் Go to CPanel என்பதை கிளிக் செய்தால் கீழேயுள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும் 


 

அதில் நீங்கள் சுயமாக தயாரித்த (உருவாக்கிய) உங்களுடைய இணையத்தளத்தை File Manage ஊடாக Public html எனும் Folder ற்குள் Upload செய்து செயற்பட வைக்கலாம். அல்லது



B, Build Website என்பதை கிளிக் செய்து கீழேயுள்ளது போலுள்ள பக்கத்தில்


உங்களுக்கு பிடித்தமான ஏதாவதொரு Template  ஐ Select செய்து உங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல் மாற்றங்களைச் செய்தும் இலகுவாக உங்கள் இணையத்தளத்தை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு உங்களுடைய இணையத்தளத்தை உருவாக்கி முழு உலகிற்கும் இணையத்தளத்தை காட்சிப்படுத்தலாம்.
Web Statistics