உங்களுக்குத் தேவையான மின்னுல்களை Download செய்துகொள்ள



உங்களுக்குத் தேவையான எந்தவகையான மின்புத்தகங்களையும் நீங்கள் www.Scribd.com எனும் வலைத்தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் இத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்வதற்கு நீங்கள் இத்தளத்தின் உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியமாகும்.

நீங்கள் இத்தளத்திலிருந்து மின்புத்தகங்களை .PDF கோப்பாகவோ அல்லது .TXT கோப்பாகவோ Download செய்து கொள்ளலாம். மின்புத்தகங்களை Download செய்ய முற்படுகையில் உங்களுடைய Username ஜயும் Password ஜயும் இவ் வலைத்தளம் கேட்கும். அவ்வேளையில் உங்களுக்கு புதிதாக உறுப்பினராக சேர்ந்து கொள்ள தாமதங்கள் ஏற்படலாம். இந்த சிக்கல்களை தவிர்த்துக் கொள்வதற்காக நீங்கள் கீளுள்ள Username,Password ஜ பயன்படுத்தி இலகுவாகவும் காலதாமதமின்றியும் புத்தகங்களை Download செய்யுங்கள்.

Username ஆக Scribdmenan என்பதையும்
Password ஆக Scribd என்பதையும் பயன்படுத்துங்கள்.

விண்டோசில் றியிஸ்ரி என்றரல் என்ன?

விண்டோசில் றியிஸ்ரி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதிலேயே விண்டோஸ் இயங்கு தளம் பற்றிய சகல விபரங்களும் பதிந்து வைக்கப் பட்டிருக்கும். இதில் ஏதேனும் தவறான மாற்றங்கள் ஏற்படுமிடத்து விண்டோஸ் இயங்குதளமே பதிக்கப்படும். ஆனால் இதைப்பற்றி நன்றாக அறிந்தவர்கள் இதில் மாற்றங்கள் மேற்கொண்டு விண்டோஸை தம் விருப்பப்படி மெருகேற்றலாம்.

இந்த றியிஸ்ரில் மாற்றம் செய்வதன்மூலம் நாம் பலவாறான மாற்றங்களை விண்டோஸில் ஏற்படுத்தமுடியும். உதாரணமாக

♠ Start பட்டனிலுள்ள Start என்பதற்குப் பதிலாக நமக்கு விருப்பமான பெயரை இடலாம்.


♠ கணினி On ஆகி விண்டோஸ் Loading ஆகும் போது உங்களுடைய பெயர் வரும்படி செய்யலாம்.



♠ Recycle bin ற்கு பெயரை மாற்றலாம்.


♠ மை கம்யூட்டரில் உள்ள floppy டிரைவையோ அல்லது வேறு டிரைவுகளையோ மறைக்க முடியும்.
♠ இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் பின்னனியை மாற்றலாம்.
♠ இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் பெயரை மாற்றலாம்.


♠ Display properties ஜ மறைக்க முடியும்.
♠ Control panel ஜ மறைக்க முடியும்.
♠ Start மெனுவின் வேகத்தை கூட்ட முடியும்.
♠ விண்டோஸ் மூலம் டொஸ்ஸிற்கு செல்வதை தடுக்கலாம்.
♠ Shortcut களின் அடியிலிருக்கும் வளைந்த அம்புக்குறிகளை அளிக்கலாம்.

இவற்றைப்போன்று பல்வேறு ஜாலங்களை றியிஸ்ரியில் மாற்றங்கள் செய்வதன்மூலம் புரியலாம்.ஆனால் இவற்றைச் செய்யும்முன்னர் நீங்கள் றியிஸ்ரியை Backup எடுத்துவைத்தல் அவசியமாகும் ஏனெனில் தற்சமயம் நீங்கள் மாற்றம் செய்யும் போது ஏதாவது தவறு ஏற்பட்டுவிடின் இது பயன்படும்.

றெயிஸ்ரியை Backup செய்து கொள்ள.
Start -> Run -> Regedit
இப்படி றியிஸ்ரியை திறந்து பைல் மெனுவிலுள்ள Export என்பதை கிளிக் செய்து Save செய்யவேண்டிய இடத்தைக் காட்டி இதற்கு ஒரு பெயரை வளங்கி அதற்கு அடுத்ததாக Export range என்பதில் All என்பதை தெரிவு செய்து Save செய்தால் போதும்.

பைனரி இலக்க முறை



Binary Number System என்பது நமது கணினி பயன்படுத்தும் ஒரு இலக்க முறையாகும்.இந்த இலக்க முறை 2 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட இலக்கமாகும். அதாவது இந்த number system ல் 1,0 ஆகியவையே அடிப்படையாகக் காணப்படும்.

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் இலக்க முறை Decimal Numbers என அழைக்கப்படும். இதேபோலவே கணினி பயன்படுத்தும் இலக்கமுறை Binary Numbers என அழைக்கப்படும்.

சாதாரணமாகவே நாம் 100 என்று டைப் செய்தால் கணினி அதை நேரடியாகப் புரிந்து கொள்ளாது. அவ் இலக்கத்தை தனது Binary இலக்கப்படி 1100100 என்று மாற்றியே புரிந்து கொள்கிறது.

இப்படியே நாம் எதை உள்ளீடு செய்தாலும் Binary Number ஆக மாற்றியே அறிந்து கொள்கிறது. இதேபோலவே நமது பைல்கள், தகவல்கள் அனைத்துமே இப்படியாக மாற்றப்பட்டே சேமிக்கப்படுகிறது.

Decimal இலக்கத்தை Binary இலக்கமாக ஆக மாற்றுவது எப்படி ?

உதாரணமாக 30 என்ற இலக்கத்தை எப்படி Binary க்கு மாற்றுவது என்று பார்ப்போம்.




30 ஜ 2 ஆல் பிரியுங்கள் ஏனெனில் Binary Number இன் அடி 2 ஆகும்.

ஆகவே 30 என்று நாம் டைப் செய்யும்போது கணினி 11110 என்று மாற்றியே புரிந்து கொள்கிறது.

இதேபோல 50 என்று டைப் செய்தால் கணினி 110010 என்று மாற்றம் செய்கிறது.
Web Statistics