ஒவ்வெரு கம்ப்யூட்டரிலும் நிச்சயம் ஒரு இயங்கு தளம் இருக்கும் இதை சுருக்கமாக OS என்று அழைக்கப்படும். கணினியில் இருக்கும் ஹாட்வெயார் சாதனங்களை கையாளவும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை கட்டுப்பாட்டோடு இயக்கவும், ஃபைல்களை கையாளவும் ஓப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுகிறது. மனிதனால் நேரடியாக கணினியோடு இணைய முடியாது இந்த ஓப்ரேட்டிங் சிஸ்டமே மனிதனையும் கணினியையும் இணைக்கிறது.
மனிதனையும் கணினியையும் இணைக்கின்ற இணைப்புப் பாலமாக ஓப்ரேட்டிங் சிஸ்டம் விளங்குவதால் இதனை யூசர் இன்ரர்பேஸ் (User interface) என்றும் அழைக்கப் படுகிறது. பேர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஓப்ரேட்டிங் சிஸ்டங்களில் சில:
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 95 (Windows 95) மற்றும் வின்டோஸ் என்ரி (Windows NT)
ஜ.பி.எம்(IBM) நிறுவனத்தின் OS/2
லினக்ஸ்
போன்றனவும் மெகின்டொஷ் கம்ப்யூட்டர்களில் 'MACOS' ஓப்ரேட்டிங் சிஸ்டமும் பயன்படுத்தப் படுகிறது
மேலும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 'DOS' (Disk Operating System) ஓப்ரேட்டிங் சிஸ்டம் மிகவும் புகள்பெற்று விளங்கியது. தற்காலத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் எக்ஸ்பி (Windows xp), வின்டோஸ் விஸ்டா (Windows Vista) போன்றனவே அதிகம் பாவனையில் உள்ளது. லினக்ஸ் Operating Systemமும் சமகாலத்தில் ஓரளவு புகள்பெற்று வருகிறது.
No comments:
Post a Comment