யுனிக்கோட்

யுனிக்கோட் எழுத்துருவை தமிழில் சீதுரு எழுத்து வடிவம் என அழைக்கப்படுகிறது. இந்த எழுத்துரு மற்றய எழுத்துக்களைவிட முக்கியம் பெறுவதற்குக் காரணம் என்னவெனில் மற்ற எழுத்துக்களைப் பயன்படுத்தி எந்த ஒரு விடயத்தை எழுதினாலோ அல்லது ஏதாவது புத்தகத்தை எழுதி Save செய்து அதை எழுதிய கணினியிலிருந்து இன்னொரு கணனிக்கு கொண்டுசென்று அந்த File ஜ Open செய்யும்போது சிலவேளைகளில் குறிப்பிட்ட அந்த எழுத்துரு மற்றய கணினியில் இல்லாதிருந்தால் நம்முடைய File ல் இருந்த விடயங்கள் நமக்குப் புரியாதவாறு குளம்பிப் போய் காணப்படும். இதற்குக் காரணம் நாம் பயன்படுத்திய எழுத்துருவிற்குப்பதில் கணனி வேறொரு எழுத்துருவைப் பயன்படுத்தியமையாகும். சுரி நாம் பயன்படுத்திய எழுத்துருவை Copy செய்து கொண்டு சென்று அதைப்பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுவர். இந்த முறை சாத்தியப்பட்டாலும் இதிலும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் நாம் அவசரமாகச் செல்லும்போது மறந்து வேறேதும் எழுத்துருவைக் Copy செய்ய வாய்ப்புண்டு இதைப்போன்ற பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிவரும் இந்தப் பிரச்சரனைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த வளியே யுனிக்கோட் எழுத்துரு முறையாகும்.

அதாவது ஒரு கணினியில் வைத்து யுனிக்கோட்டில் எழுதினால் மற்றய கணினியில் யுனிக்கோட் எழுத்துரு இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த எழுத்துருவே இப்போது இணையத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் தமிழ்யுனிக்கோட் எழுத்துருவைப் பயன்படுத்தி தமிழில் எதை எழுதினாலும் அது ஆங்கில மொழிக் கணினியானாலும் அல்லது யப்பானிய மொழிக் கணினியானாலும் சரி அல்லது பிரஞ்சு மொழிக் கணினியானாலும் சரி எந்த மொழிக் கணினியிலும் நாம் எழுதியது தமிழ் மொழியில் தான் தெரியும். இது எப்படிச் சாத்தியமாகிறது எனில் நாம் யுனிக்கோட்டில் எழுதும்போது அது ஒரு சாதாரண எழுத்துருவாக இல்லாமல் அந்த எழுத்துக்கள் அப்படியே குறியீடுகளாக மாற்றப்படுகிறது இதனால்தான் எந்த மொழிக்கணினியிலும் இவற்றால் பிரச்சனை ஏற்படுவதில்லை.
நாமும் நமது கணினியில் இந்த எழுத்துருவைப் பயன்படுத்தலாம். அதற்காக நாம் நமது கணினியில் சில Settings செய்யவேன்டும்



நமது கணினியில் யுனிக்கோட்டை செயற்படுத்தும் முறையை அறிந்து கொள்ள கணினிக் கிறுக்கன் என்பதைக் கிளிக் செய்யுங்கள்



யுனிக்கோட் பற்றிய மின்பாடத்தின் முலம் யுனிக்கோட் எழுத்துரு பற்றி விரிவாக அறிந்து கொள்ள தமிழ் யுனிக்கோட் செய்யுங்கள்.

1 comment:

ம.கஜதீபன் said...

தங்கள் ஆக்கம் நன்றாக உள்ளது மேனன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சுரதா யாழ்வாணனின் ஒன்லைன் தமிழ் தட்டச்சிலும் பார்க்க அண்மையில் என்.ஏச்.எம் நிறுவனத்தாரின் புதிய ஒரு நிரலி வெளியிடப்பட்டுள்ளது. பயன்படுத்த மிகவும் இலகுவாகவும் உள்ளது. அதனையும் உரு முறை உபயோகித்து பாருங்கள் வித்தியாசம் புரியும். பதிவிறக்க கீழே உள்ள சுட்டியில் சொடுக்குக.

http://software.nhm.in/

Web Statistics