Blogspot என்றால் என்ன என்று நீங்கள் அறிவீர்களா ?

Blogspot என்றால் Website களைப் போலல்லாது சிறிது வித்தியாசமானது இதை ஒருதனிநபரே உருவாக்கிப் பராமரிக்கலாம். இலகுவானதும் கூட. ஒரு தனிநபர் தனக்கு விருப்பப்பட்ட விடயங்களை தனது விருப்பு வெறுப்புக்களை சமூகத்தின் மீதான பார்வையை எந்தத் தடையும் தொந்தரவும் இல்லாமல் வெளியுலகிற்குக் கூறலாம். Blog தளங்கள் பல்வேறுபட்ட பயனர்களினால் உருவாக்கிப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவரவர்க்கு விரும்பியவாறு எழுதுகிறார்கள் அனேகமாக Website களைப் போலல்லாது வலைத்தளங்கள் உரியவர்களால் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தல்(updating) செய்யப்படும். ஆனால் இதில் எழுதப்படும் விடயங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை ஏனெனில் இவை யாரால் எழுதப்படுகிறது எங்கிருந்து எழுதுகிறார்கள் என்பதை அவர்கள் கூறினாலன்றி அறிந்து கொள்வது கடினமாகும்.


உருவாக்குவதற்கு.....


நாம் எமது வலைப்பதிவின்மூலம் நல்ல விடயங்களை கூறலாம். உலகின் எந்த இடத்தில் இருப்பவர்களுடனும் நண்பர்களாகலாம். இவற்றை அறிந்து நீங்களும் வலைப்பதிவை உருவாக்க விரும்பியிருப்பீர்கள் நாம் வலைப்பதிவை இலகுவாகவும் இலவசமாகவும் Blogger.comல் உருவாக்கலாம். ஏற்கனவே Googleல் ஒரு gmail Address இருந்தால் வேலை இன்னும் இலகுவாக முடிந்துவிடும். Blogger.comற்குச் சென்று அங்கு கூறப்படும் அறிவுரைகளிற்கேற்ப செயற்படுவதன் மூலம் இதை சாத்தியப்படுத்தலாம்.

No comments:

Web Statistics