பைனரி இலக்க முறை



Binary Number System என்பது நமது கணினி பயன்படுத்தும் ஒரு இலக்க முறையாகும்.இந்த இலக்க முறை 2 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட இலக்கமாகும். அதாவது இந்த number system ல் 1,0 ஆகியவையே அடிப்படையாகக் காணப்படும்.

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் இலக்க முறை Decimal Numbers என அழைக்கப்படும். இதேபோலவே கணினி பயன்படுத்தும் இலக்கமுறை Binary Numbers என அழைக்கப்படும்.

சாதாரணமாகவே நாம் 100 என்று டைப் செய்தால் கணினி அதை நேரடியாகப் புரிந்து கொள்ளாது. அவ் இலக்கத்தை தனது Binary இலக்கப்படி 1100100 என்று மாற்றியே புரிந்து கொள்கிறது.

இப்படியே நாம் எதை உள்ளீடு செய்தாலும் Binary Number ஆக மாற்றியே அறிந்து கொள்கிறது. இதேபோலவே நமது பைல்கள், தகவல்கள் அனைத்துமே இப்படியாக மாற்றப்பட்டே சேமிக்கப்படுகிறது.

Decimal இலக்கத்தை Binary இலக்கமாக ஆக மாற்றுவது எப்படி ?

உதாரணமாக 30 என்ற இலக்கத்தை எப்படி Binary க்கு மாற்றுவது என்று பார்ப்போம்.




30 ஜ 2 ஆல் பிரியுங்கள் ஏனெனில் Binary Number இன் அடி 2 ஆகும்.

ஆகவே 30 என்று நாம் டைப் செய்யும்போது கணினி 11110 என்று மாற்றியே புரிந்து கொள்கிறது.

இதேபோல 50 என்று டைப் செய்தால் கணினி 110010 என்று மாற்றம் செய்கிறது.

No comments:

Web Statistics