கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டுஇ முறைப்படி கோர்த்த ஆவணக்கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப்பகுத்து, எதனைச் செய்யவேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆவணக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படிச் செய்நிரல்களைச் சேசமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்குள் உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0,1 ஆகிய எண் கோவைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.
கணினிகள் அதியுச்ச பல்பயன் கொண்டவை. ஆதலால் அவற்றை அகில தகவல் செயற்படுத்தும் எந்திரங்கள் எனக் குறிப்பிடலாம். சேர்ச்-தெரிங் கூற்றின் படி ஒரு குறிப்பி;ட்ட இளிவுநிலை ஆற்றலை (வேறு வகையில் கூறினால் அகில தெரிங் இயந்திரத்தைப் போல் மிகக்கூடிய எந்தக் கணினியும்) கொண்ட கணினி கோட்பாட்டின் அடிப்படையில் வேறு எந்தக் கணினியினதும் கொள்பணியை ஆற்றக்கூடியது அதாவது சம்பளப்பட்டியல் தயாரிப்பதிலிருந்து தொழிலக யந்திரக் கட்ப்பாடுவரை அனேக பணிகளுக்கு ஒரேவிதமான கணினி வடிவமைப்புக்களே பயன்படுகின்றன. முந்தய கணினிகளைவிட தற்போதைய கணினிகள் வேகத்திலும் தகவல் செயற்படுத்தல் கொள்ளளவிலும் பெரும் வளற்சியைக் கண்டுள்ளன. இவற்றின் இந்தத்திறன் காலப்போக்கில் அடுக்குறிபோல் அதிகரித்துச் சென்றுள்ளது. இந்த செயற்பாட்டை மூர் விதி என்று கூறுவர்
பல்வேறான பௌதீக பொதிகளில் கணினிகள் கிடைக்கின்றன. தொன்மையான கணினிகள் பெரிய அரங்கின் கொள்ளளவை கொண்டவையாக இருந்தன. தற்போதும் விசேட அறிவியல் கணிப்புகளுக்கு பயன்படும் மீகணினிகள் மற்றும் நிறுவனங்கின் பரிமாற்ற செயற்பாடுகளுக்கு பயன்படும் பிரதான-சட்டங்கள் போன்றவற்றுக்கு இவ்வாறான மாபெரும் கணிப்பிடும் வசதிகள் உள்ளன. மக்களுக்கு அதிகம் பரிச்சயமானவையாக அமைவன சிறியளவானதும் ஒருவரின் பயன்பாட்டுக்குரியதுமான தனியாள் கணினிகளும், அதன் கொண்டுசெல் நிகரான ஏட்டுக்கணினிகளும் ஆகும். ஆனால் தற்காலத்தில் அதிகம் பஙன்பாட்டில் உள்ள கணினிகளாக அமைபவை உட்பொதிக் கணினிகளாகும். ஊட்பொதிக் கணினிகள் இன்னொரு சாதனத்தை கட்டுப்படுத்துவதற்குரிய சிறிய கணினிகளாகும். இவை போர்விமானத்திலிருந்து தானியங்கிப் படப்பிடிப்புக் கருவிகள்வரை பயன்படுத்தப்படுகின்றன
நன்றி: விக்கிபீடியா
1 comment:
First Impression is
Good Impression .....
Post a Comment