நீங்கள் அடிக்கடி பார்க்கும் இணையத்தளம் ஒன்றுக்கு Shortcut ஒன்றை உருவாக்கும் முறையை அறிவீர்களா?

# முதலில் உங்களுக்கு விருப்பமான இணையத்தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
# அடுத்து அவ் இணையப் பக்கத்தில் link எதுவும் இல்லாத இடத்தில் வைத்து Right click செய்யுங்கள்.
# அப்போது கிடைக்கும் Contact menu வில் Create shortcut என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
# இப்போது ஒரு Dialog box தோன்றும் அதிலே Yes என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
# இப்போது உங்கள் Desktop ல் அவ் இணையப் பக்கத்திற்கான Shortcut உருவாக்கப் பட்டிருக்கும்.
# இத்துடன் Shortcut உருவாக்கும் வேலை முடிந்தது.

Shortcut ஒன்றை உருவாக்குவதால் என்ன பயன் எனில் நீங்கள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் உங்களுக்குத் தேவையான விடயம் இருக்கும் ஒரு பக்கத்திற்குச் செல்லக்கூடும் அவ்வேளையில் அப்பக்கத்தின் முகவரி நீளங்கூடியதாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாதிருக்கும் அவ்வேளையில் நீங்கள் மேற்கூறியவாறு அப்பக்கத்திற்கு Shortcut ஒன்றை உருவாக்கிவிடுங்கள். இனி அந்தப் பக்கத்தை Close செய்ய விரும்பினால் Close செய்யலாம்.


இனி நீங்கள் Computer ஜ Restart செய்தால் கூட Desktopபிலுள்ள அந்தப் பக்கத்திற்கான Shortcutஜ Double click செய்தால் போதும் நேரடியாக அந்தப் பக்கமே Openஆகிவிடும். முயன்று பாங்கள்.
நாம் சாதாரணமாக 100g , 2kg என்றெல்லாம் நிறையை அளப்பதற்கு பயன்படுத்துவோம். இது அனைவரும் அறிந்த விடயமே ஆனால் கணினியில் என்ன அளவுத்திட்டம் கொண்டு நாம் பைல்களின் கொள்ளளவை அளக்கிறோம் என்று சிலருக்குத் தெரிவதில்லை. அனேகமாக பலருக்கு இது தெரிந்திருந்தும் ஒளுங்கு முறையை விட்டுவிடுகின்றனர். இங்கே இதைப்பற்றி அறிந்து கொள்வோம்.


8 bits-------------- ----1 Byte

1024 Byte -------------1 Kilobite

1024 Kilobite---------- 1 Megabyte

1024 Mega byte -------1 Gega byte

1024 gega byte --------1 Tera byte


அதாவது kilo byte என்பதை Kb என்றும், Mega byte என்பதை mb என்றும், Gega byte என்பதை gb என்றும், Tera byte என்பதை tb என்றும் சுருக்கமாகக் கூறப்படும். இதுவே கணினியின் அடிப்படை அளவுகோலாகும். இதை பொதுவாக Common Calculation கூறப்படும்.

Turn off மெனுவிலுள்ள button கள்.

நாம் கணினியை Start-> turn off என்பதன் மூலம் off செய்ய முயலும் போது மேலே இருப்பதுபோல் மூன்று button களைக் கொண்ட dialog box ஒன்று தோன்றுகிறதல்லவா. இதைப்பற்றி அறிந்து கொள்வோம்.




இவற்றில் முதலாவதாகக் காணப்படுவது Stand by என்ற button ஆகும். இந்த buttonனின் பயன்பாடு என்னவெனில் நாம் ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம் திடீரென்று வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. இப்போது தான் இந்தக் கீயின் உதவி நமக்குத் தேவை. அதாவது நாம் வெளியில் செல்லும்போது கணினியை அப்படியே விட்டுச் சென்றால் மின்சாரம் அதிகமாக வீணாகிவிடும். அல்லது பைலை சேவ் செய்து கணினியை நிறுத்திவிட்டுச் சென்றால் மீண்டும் வந்து on செய்யும்போது மறுபடி on ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். இந்நேரத்தில் தான் நாம் இதைப் பயன்படுத்த வேண்டும். அதாவது பைலை சேவ் செய்து கணினியை இந்த stand by mode ல் வைத்துச் சென்றால் மின்சாரம் வீணாகாது, மீண்டும் on செய்யத் தேவை இல்லை keyboard ல் ஏதாவது ஒரு button ஜ அழுத்தினாலே போதும் உடனடியாகவே கணினி இயங்க ஆரம்பித்து விடும். இதனால் வேலையும் இலகுவாகி விடும். மின்சாரமும் சேமிக்கப்படும்








அடுத்தாகக் காணப்படுவது Turn off என்ற button ஆகும். இதன்மூலம் கணினியை நிரந்தரமாக off செய்ய முடியும். அதாவது நாம் கணினியை இரவு off செய்து விட்டு காலையில் on செய்தல்.









இறுதியாகக் காணப்படுவது Restart என்ற button ஆகும். அனேகமாக நாம் இந்த button ஜ அடிக்கடி பயன்படுத்துவது குறைவு. கணினி சிலவேளைகளில் ஸ்தம்பித்து நின்றுவிடும் நேரங்களில் இதைப் பயன்படுத்துவோம். இந்த button அழுத்தும்போது நமது கணினி ஒருதடவை தானாகவே off ஆகி உடனேயே on ஆகும். மேலும் இந்த button நாம் ஏதாவது Softwareஜ நிறுவினாலும் பயன்படுத்துவோம்.

கணினி

கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டுஇ முறைப்படி கோர்த்த ஆவணக்கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப்பகுத்து, எதனைச் செய்யவேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆவணக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படிச் செய்நிரல்களைச் சேசமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்குள் உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0,1 ஆகிய எண் கோவைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.
கணினிகள் அதியுச்ச பல்பயன் கொண்டவை. ஆதலால் அவற்றை அகில தகவல் செயற்படுத்தும் எந்திரங்கள் எனக் குறிப்பிடலாம். சேர்ச்-தெரிங் கூற்றின் படி ஒரு குறிப்பி;ட்ட இளிவுநிலை ஆற்றலை (வேறு வகையில் கூறினால் அகில தெரிங் இயந்திரத்தைப் போல் மிகக்கூடிய எந்தக் கணினியும்) கொண்ட கணினி கோட்பாட்டின் அடிப்படையில் வேறு எந்தக் கணினியினதும் கொள்பணியை ஆற்றக்கூடியது அதாவது சம்பளப்பட்டியல் தயாரிப்பதிலிருந்து தொழிலக யந்திரக் கட்ப்பாடுவரை அனேக பணிகளுக்கு ஒரேவிதமான கணினி வடிவமைப்புக்களே பயன்படுகின்றன. முந்தய கணினிகளைவிட தற்போதைய கணினிகள் வேகத்திலும் தகவல் செயற்படுத்தல் கொள்ளளவிலும் பெரும் வளற்சியைக் கண்டுள்ளன. இவற்றின் இந்தத்திறன் காலப்போக்கில் அடுக்குறிபோல் அதிகரித்துச் சென்றுள்ளது. இந்த செயற்பாட்டை மூர் விதி என்று கூறுவர்
பல்வேறான பௌதீக பொதிகளில் கணினிகள் கிடைக்கின்றன. தொன்மையான கணினிகள் பெரிய அரங்கின் கொள்ளளவை கொண்டவையாக இருந்தன. தற்போதும் விசேட அறிவியல் கணிப்புகளுக்கு பயன்படும் மீகணினிகள் மற்றும் நிறுவனங்கின் பரிமாற்ற செயற்பாடுகளுக்கு பயன்படும் பிரதான-சட்டங்கள் போன்றவற்றுக்கு இவ்வாறான மாபெரும் கணிப்பிடும் வசதிகள் உள்ளன. மக்களுக்கு அதிகம் பரிச்சயமானவையாக அமைவன சிறியளவானதும் ஒருவரின் பயன்பாட்டுக்குரியதுமான தனியாள் கணினிகளும், அதன் கொண்டுசெல் நிகரான ஏட்டுக்கணினிகளும் ஆகும். ஆனால் தற்காலத்தில் அதிகம் பஙன்பாட்டில் உள்ள கணினிகளாக அமைபவை உட்பொதிக் கணினிகளாகும். ஊட்பொதிக் கணினிகள் இன்னொரு சாதனத்தை கட்டுப்படுத்துவதற்குரிய சிறிய கணினிகளாகும். இவை போர்விமானத்திலிருந்து தானியங்கிப் படப்பிடிப்புக் கருவிகள்வரை பயன்படுத்தப்படுகின்றன

ஓப்ரேட்டிங் சிஸ்டம் (Operating System) பற்றி

ஒவ்வெரு கம்ப்யூட்டரிலும் நிச்சயம் ஒரு இயங்கு தளம் இருக்கும் இதை சுருக்கமாக OS என்று அழைக்கப்படும். கணினியில் இருக்கும் ஹாட்வெயார் சாதனங்களை கையாளவும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை கட்டுப்பாட்டோடு இயக்கவும், ஃபைல்களை கையாளவும் ஓப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுகிறது. மனிதனால் நேரடியாக கணினியோடு இணைய முடியாது இந்த ஓப்ரேட்டிங் சிஸ்டமே மனிதனையும் கணினியையும் இணைக்கிறது.
மனிதனையும் கணினியையும் இணைக்கின்ற இணைப்புப் பாலமாக ஓப்ரேட்டிங் சிஸ்டம் விளங்குவதால் இதனை யூசர் இன்ரர்பேஸ் (User interface) என்றும் அழைக்கப் படுகிறது. பேர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஓப்ரேட்டிங் சிஸ்டங்களில் சில:
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 95 (Windows 95) மற்றும் வின்டோஸ் என்ரி (Windows NT)
ஜ.பி.எம்(IBM) நிறுவனத்தின் OS/2
லினக்ஸ்
போன்றனவும் மெகின்டொஷ் கம்ப்யூட்டர்களில் 'MACOS' ஓப்ரேட்டிங் சிஸ்டமும் பயன்படுத்தப் படுகிறது
மேலும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 'DOS' (Disk Operating System) ஓப்ரேட்டிங் சிஸ்டம் மிகவும் புகள்பெற்று விளங்கியது. தற்காலத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் எக்ஸ்பி (Windows xp), வின்டோஸ் விஸ்டா (Windows Vista) போன்றனவே அதிகம் பாவனையில் உள்ளது. லினக்ஸ் Operating Systemமும் சமகாலத்தில் ஓரளவு புகள்பெற்று வருகிறது.
Web Statistics