கிரிப்டோகரன்சி (Cryptocurrency) என்றால் என்ன?

----------------------------------------------------------------------------------------------------------

UPDATE : கிரிப்டோகரன்சி பற்றி தெரிந்தவர்கள் இங்கு சென்று முற்றிலும் இலவசமாகவே 25 USD பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு.

----------------------------------------------------------------------------------------------------------



பண நோட்டு (Currencies) Vs கிரிப்டோகரன்சி (Cryptocurrency) இடையிலான வேறுபாடுகள்.



பண நோட்டு (Currencies), சில்லறைகள் (Coins), டாலர்கள் (Dollars), யூரோக்கள் (Euro) என சொல்லலாம். இவை அனைத்திற்கும் கைகளால் தொட்டு உணரக்கூடிய வடிவம் உண்டு. இவற்றை உங்கள் கண்களால் பார்க்க, கைகளால் தொட்டு உணர, பிறருக்கு கொடுத்து வாங்க முடியும்.

இவை அனைத்திற்கும் மாற்றானது கிரிப்டோகரன்சி (Cryptocurrency). இதன் தமிழ்ப் பதம் ”மெய்நிகர் நாணயம்” என்பதாகும். ஆம் இது முற்றிலும் டிஜிட்டல் மயமானது. உங்களது கைகளால் தொட்டு உணர முடியாது. இவை அனைத்தும் வாலட் (Wallet) எனப்படும் அமைப்புகளில் எண் வடிவத்தில் மாத்திரமே சேமிக்கப்பட்டிருக்கும். அந்த கிரிப்டோ கரன்சியை ஏற்றுக்கொள்பவர்களிடம் நீங்கள் வர்த்தகம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்டுத்திக்கொள்ளலாம். பொதுவாக நாம் மற்றவருக்கு பணம் அனுப்பும் போது வங்கி மூலமாக அனுப்புகிறோம். வங்கி நம் அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை மற்றவர் அக்கவுண்டுக்கு மாற்றி பரிமாற்றத்தை நிறைவுசெய்கிறது. 


கிரிப்டோகரன்சி மூலமாக பரிவர்த்தனை செய்யும் போது  அந்த கிரிப்டோகரன்சி மற்றவர் அக்கவுண்டுக்கு நேரடியாக செல்கிறது, நடுவில் வாங்கியோ யாருமே கிடையாது. மேலும் இதை செயல்பட வைப்பது பிளாக் செயின்(Blockchain) என்னும் ஒரு தொழி்நுட்பம். வர்த்தக நோக்கத்திற்காக பல நிறுவனங்கள் தங்கள் சொந்த நாணயங்களை உருவாக்கி வழங்குகின்றன. அவை பெரும்பாலும் டோக்கன்கள் (Tokens) என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இவை அந் நிறுவனம் வழங்கும் பொருட்கள் அல்லது சேவைகளுக்காக வர்த்தகம் செய்யப்படலாம். பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சிகள் வேலை செய்கின்றன.


Blockchain என்பது பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் மற்றும் பதிவு செய்யும் பல கணினிகளில் பரவியுள்ள ஒரு பரவலாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தின் முறையீட்டின் ஒரு பகுதி அதன் பாதுகாப்பு. இந்த தொழில்நட்பதை ஏமாற்றுவது தற்காலத்தில் சாத்தியம் இல்லை என்பது துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்து.






கிரிப்டோகரன்சியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் 
  1. Coins
  2. Tokens
Coins எனப்படுபவை தமக்கென செந்தமாக  செயல்முறை கட்டமைப்பை (Blockchain) கொண்டிருக்கும், Tokens எனப்படுபவை தமக்கென செந்தமாக  செயல்முறை கட்டமைப்பை கொண்டிருக்கா, பிறருடைய செயல்முறைமையில் செயற்படும் விதமாக உருவாக்கப் பட்டிருக்கும் (உதாரணமாக : வாடகை வீட்டில் வசிப்பதைப் போன்றது).


கிரிப்டோ கரன்சியை உருவாக்குவது யார் (Who create cryptocurrency) ?


இணையத்தில் தற்போது அதிக எண்ணிக்கையில் கிரிப்டோகரன்ஸிக்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவை அனைத்துமே ஏதோ ஒரு நபரால்/ குழுவால் உருவாக்கப் பட்டவையே.

கிரிப்டோ கரன்சி என்றவுடன் மக்களின் நினைவிற்கு முதலில் வருவது பிட்காயின் (Bitcoin) தான். இது 2009 இல் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் சடோஷி நாகமோடோ (Satoshi Nakamoto) என்கிற தனிநபர் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை அப்படிப்பட்ட நபர் யாரென்றே தெரியவில்லை. இதனை உருவாக்கியவர் தனி நபரா அல்லது குழுவா என்று கூட கண்டுபிடிக்கமுடியவில்லை.



Bitcoin vs Altcoins


 தற்போது புழக்கத்தில் ஆயிரக்கணக்கான கிரிப்டோ கரன்சிகள் இருக்கின்றன. அவற்றில் பிட்காயினே முதன்முதலாக உருவாக்கப்பட்டதும் முன்னிலை வகிப்பதுமாகும். பிட்காயினைத் தவிர மற்றய அனைத்து நாணயங்களும் ஆல்ட் காயின்
(Altcoin - Alternative coin) என்ற பொதுப்பெயர் கொண்டே அழைக்கப்படும்.

தற்காலத்தில் சந்தையில் பிரபலமான கிரிப்டோ கரன்சிகள் சில..

  1. Bitcoin (BTC)
  2. Ethereum (ETH)
  3. Tether (USDT) (நிலையான பெறுமதியுடைய நாணயம்)
  4. Binance coin (BNB)
  5. Litecoin (LTC)
  6. Solona (SOL)
  7. Dogecoin (DOGE)
  8. Polkadot (DOT)
  9. Vechain (VET)
  10. Tron (TRX)

கிரிப்டோகரன்சி ஏன் பிரபலமாக உள்ளது?

கிரிப்டோகரன்சி உலகளவில் மிகவும் பிரபலமாகியுள்ளதற்கான காரணங்கள்.

  • பிட்காயின் கரன்சியை எதிர்காலத்தில் இருக்க போகும் முக்கியமான கிரிப்டோகரன்சியாக பல நாட்டினர் கருதுகின்றனர். அதனால் அதன் விலை மதிப்பு அதிகரிப்பதற்குள் பலர் தற்போது வாங்கி அடுக்கிக்கொண்டு வருகின்றனர்.

  • இந்த விதமான கரன்சியில் எந்த நாட்டின் ரிசர்வ் வங்கியும் தலையிடாது என்பதால் இதன் மதிப்பை பணவீக்கம் வந்தால் குறைக்கமுடியாது.

  • இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் மிகவும் பாதுகாப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று கருதுகின்றனர்.

  • கிரிப்டோகரன்சி எந்தவித வட்டியும் இல்லாமல் மதிப்பு உயர்வதால் அதனை பிற்காலத்தில் ஒரு பெரிய கரன்சியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கருதி சிலர் வாங்குகின்றனர்.

நாம் கிரிப்டோகரன்சிகளை வாங்குவது அல்லது சொந்தமாக்கிக் கொள்வது எப்படி? நம்பிக்கையானதா?


நாள்தோறும் பல கிரிப்டோகரன்சிகள் உருவாக்கப்படுகிறது, ஆனால் இவை 
அனைத்துமே இணையத்தில் மட்டுமே உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் இவற்றை வாங்குவது என்பது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை போன்றதுதான்.

நாம் அவற்றை வாங்க விரும்பினால் Exchange websites மூலமாக வாங்கமுடியும் அல்லது அந்தந்த கரன்சிகளை உருவாக்கிய நிறுவனத்தையோ நபர்களையோ நேரடியாகத் தொடர்புகொண்டும் வாங்கலாம். மேலும் சில இணைய விளையாட்டுக்கள், இலவச வழங்கல்களில் (Airdrop) பங்குபற்றுவதன் மூலமும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

எப்போது இதன் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போது அதன் மதிப்பு குறைந்துபோகும். மேலும் உருவாக்கியவர்களே ஒருநாள் அதனை அழித்துவிட்டால் கூட யாரிடமும் முறையிட வாய்ப்பிருக்காமல் போய்விடும்.

தற்காலத்தில் சந்தையிலுள்ள கிரிப்டோகரன்சிகளையும் அவற்றின் சந்தைப் பெறுமதிகளையும் Coingecko, Coinmarketcap போன்ற இணையத்தளங்களில் பார்வையிடலாம்.



கிரிப்டோகரன்சிகள் சட்டபூர்வமானதா?

அமெரிக்காவில் அவை சட்டபூர்வமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இருப்பினும் சீனா அவற்றின் பயன்பாட்டை அடிப்படையில் தடைசெய்துள்ளது, இறுதியில் அவை சட்டபூர்வமானதா என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நாட்டையும் சார்ந்துள்ளது. முதலீட்டாளர்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்பாக கிரிப்டோகரன்சிகளைப் பார்க்கும் மோசடி செய்பவர்களிடமிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Web Statistics