Printer ஒன்றை Install செய்வது எப்படி?

1. முதலில் -> Control panal -> Printers and Faxes என்பதைக் கிளிக் செய்யுங்கள் அப்பொழுது கீழுள்ளது போன்று Printers and Faxes Open ஆகும்


2. இங்கே ஏற்கனவே இரண்டு printer கள் Install செய்யப் பட்டுள்ளன மூன்றாவதாக printer ஒன்றை Install செய்ய வேண்டுமாயின் Step 02 நீல செவ்வகத்தில் காட்டியவாறு Add a Printer என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்



3. பின்பு Next என்பதைக் கிளிக் செய்யுங்கள்

4. அடுத்து Local printer attached to this computer என்ற முதலாவது option Button ஜ தெரிவு செய்து Next Button ஜ கிளிக் செய்யுங்கள். இதற்குக் கீழுள்ள Automatically detect and install my plug and play printer என்ற Check button tick செய்ய வேண்டாம். ஏனெனில் இதைக் கிளிக் செய்தால் உங்கள் computer ரே printer ஏதாவது இணைக்கப் பட்டுள்ளதா என்று சரிபார்க்கும். இதனால் நேர விரயம் ஏற்படும்.



அதற்குக் கீழுள்ள Option Button ஜ Network printer ஒன்றை நிறுவுவதாயின் மட்டுமே தெரிவு செய்ய வேண்டும். நாம் இப்போது நிறுவப் போவது ஒரு சாதாரண Printer ரே அதனால் நீங்கள் முதலாவது option Button ஜ தெரிவு செய்தாலே போதும் பின்பு Next என்ற Button ஜ கிளிக் செய்யுங்கள்.


5. Next Button ஜ கிளிக் செய்ததும்; Step 05 ல் உள்ளதுபோல் ஒரு Dialog Box தோன்றும். இதிலே Use the Following port என்பதற்கு நேரே உள்ள Drop down box ல் சிவப்பு சதுரத்தால் காட்டப்பட்டுள்ள அம்புக் குறியை கிளிக் செய்து வரும் மெனுவில் உங்கள் printer எந்த Port ன் வழியாக கணினியுடன் இணைகிறதோ அதை தெரிவு செய்ய வேண்டும்.



பின்பு Next ஜ கிளிக் செய்யுங்கள்.


இப்போது Step 07 ல் உள்ளது போன்ற ஒரு Dialog Box தோன்றும் அதிலே Manufacture என்பதில் தயாரிப்பாளர்களின் list ம் Printers என்பதில் பிரிண்டர்களின் மொடல்களும் காணப்படும். நீங்கள் உங்களுக்குத் தேவையான பிரிண்டரை Manufacture என்பதில் தேர்ந்தெடுத்தால் அந்தப் பிரிண்டரிலுள்ள மொடல்கள் Printers எனும் பெட்டியில் காட்டப்படும் அதிலிருந்து உங்கள் பிரிண்டரின் சரியான மொடல் இலக்கத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதற்கான Driver ஜ நிறுவிக் கொள்ளலாம்..


இந்த List களில் உங்கள் பிரிண்டரிற்குரிய சரியான Driver மென்பொருள் இல்லையென்றால் பிரிண்டர் வாங்கும் போது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட CD ஜ உங்கள் CD Rom ல் இட்டுவிட்டு Step 08 ல் சிவப்பு வட்டத்தால் காட்டப்பட்டுள்ள Have Desk என்ற Button ஜ அழுத்துங்கள் அப்போது Step 09 ல் படம் 01 ல் காட்டப்பட்டுள்ளது போன்ற ஒரு சிறிய Dialog box தோன்றும் அதிலுள்ள Brows என்ற button ஜ Click செய்யுங்கள் உடனே படம் 02 ல் உள்ளதுபோன்ற ஒரு Dialog Box தோன்றும் அதில் பச்சை செவ்வகத்தால் காட்டப்பட்டுள்ள Look in என்னும் பெட்டியிலுள்ள அம்புக்குறியை கிளிக் செய்து உங்கள் CD ஜ காட்டி Open Button ஜ அழுத்துவதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம்.



அந்த List களில் உங்கள் பிரிண்டரிற்குரிய Driver மென்பொருள் இருந்தால் Step 10 ல் HP பிரிண்டரின் ர்P HP Deskjet 600 என்ற பிரிண்டர் நிறுவப் படுவதைப் போல் தேர்ந்தெடுத்து Next Butto ஜ அழுத்துங்கள்.

அடுத்து Step 11ல் உள்ளதுபோல் ஓரு Dialog Box தோன்றும் அதிலே உங்கள் பிரிண்டரிற்கான பெயரைக் கொடுத்து Do you want to use this printer as the default printer என்பதற்கு Yes என்பதை தெரிவு செய்து Ok ஜ அழுத்துங்கள்.





அடுத்து வரும் Dialog Box ல் Do not share this printer என்பதை தெரிவுசெய்து Next ஜ கிளிக் செய்யுங்கள். உங்கள் கணனி மற்றய கணனிகளுடன் Network ல் இணைந்திருந்தால் Share Name என்பதை தெரிவுசெய்து அதற்கு ஒரு பெயரை கொடுத்து இந்த பிரிண்டரை நெடவெர்க்கில் Share செய்யலாம்.

அடுத்து வரும் Dialog Box ல் Do you want to print a test page என்பதற்கு Yes என்பதை கொடுத்து Next ஜ Click செய்தால் பிரிண்டர் நிறுவப்பட்டதற்கு உறுதியாக ஒரு paper print செய்யப் படும். அடுத்து Finish என்பதை கிளிக் செய்யுங்கள்.

Finish ஜ அழுத்தியதும் Printers and faxes என்பதில் நீங்கள் கொடுத்த பெயருடன் உங்கள் பிரிண்டர் நிறுவப்பட்டிருக்கும்.


Web Statistics