ISO பைல் என்றால் என்ன?

ஐ.எஸ்.ஓ பைல் அல்லது ஐ.எஸ்.ஒ இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடி யின் விம்பம் அல்லது பிரதி எனலாம். சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் அனைத்து டேட்டாவையும் ஒரே பைலாக ஐ.எஸ்.ஒ பைலில் உள்ளடக்கி விடலாம். ISO என்பது International Organization for Standardization என்பதைக் குறிக்கிறது. இது .ISO எனும் பைல் `ட்டிப்பைக் (file extension) கொண்டிருக்கும். ஐ.எஸ்.ஓ பைல் என்பது ஒரு சிப் (zip) பைல் அல்லது கேப் (cab) பைலைப் போன்றதே. எனினும் இவை Hப் பைல் போன்று சுருங்கிய வடிவத்திலல்லாமல் சிடி அல்லது டிவிடியில் அடங்கியுள்ள மொத்த பைல்களின் கொள்ளளவில் இருக்கும்.

இந்த ஐ.எஸ்.ஓ பைலை, பகுதி பகுதியாகப் பொருத்தி ஒன்று சேர்க்கும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைத் தாஙகி வரும் ஒரு பெட்டிக்கு ஒப்பிடலாம். எமக்கு பயன்படுவது அந்தப் பெட்டிக்குள் அடங்கிருப்பவையே தவிர அந்தப் பெட்டியல்ல. ஐ.எஸ்.ஓ பைல்களும் இதே போன்றதே.

அதிக கொள்ளளவு கொண்ட மென்பொருள்களை இனையத்தின் வழியே பகிர்வதற்காகவே ஐ.எஸ்.ஓ பைல்கள் அனேகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மென்பொருளுக்குரிய அனைத்து பைல்களும் போல்டர் களும் ஒரே பைலுக்குள் அடங்கி விடுவதாலும் இதன் மூலம் பைல் இழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனாலும் ஐ.எஸ்.ஓ பைலாக அவை இணையத்தில் பகிரப்படுகின்றன. உதாரணமாக 600 மெகாபைட்டுக்கு மேல் கொள்ளளவு கொண்ட லினக்ஸ் இயங்குதளத் தின் உபுண்டு பதிப்பு இணையத்தில் இருந்து டவுன் லோட் செய்து கொள்ளக் கூடியதாக ஐ.எஸ்.ஓ பைல் வடிவிலேயே கிடைக்கிறது.

ஐ.எஸ்.ஓ பைலில் என்ன அடங்கிIருக்கின்றன என நேரடியாகத் திறந்து பார்க்க விண்டோஸில் வழியில்லை. எனவே அவை வேறு வழிகளிலேயே கையாளப்படு கின்றன. அவற்றுள் முதலாவது வழி ஐ.எஸ்.ஓ பைலை கையாள்வதற்கான யூட்டிலிட்டிகளைப் பயன்படுத்துவதாகும். அதற்கென IsoBuster, CDmage ,Daemon Tools எனச் சில யூட்டிலிட்டிகலைப் பிற நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐ.எஸ்.ஓ பைலில் அடங்கியுள்ளவற்றை “சிப் பைல்” போல் வெறொரு போல்டருக்குள் விரியச் செய்து பார்க்கலாம்.

இரண்டாவது வழி அதனை சீடியிலோ அல்லது டிவிடியிலோ பதிவு செய்து பயன்படுத்துவதாகும். அனேகமாகப் பலரும் இந்த வழியையே கையாள்கின்றனர். எனினும் இந்த ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்வதென்பது வழமையான டேட்டா அல்லது வீடியோ பைலை பதிவு செய்வது போன்றதல்ல. இங்கு சீடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள் ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் ஒன்று சேர்த்துப் பொருத்த வேண்டியிருக்கிறது. எனவே சீடியில் பதிவு செய்வதற்கான மென்பொருளில் ஐ.எஸ்.ஓ இமேஜ் பைலைப் பதிவு செய்வதற்கான வசதியும் (image burner ) இருந்தாலே அதனைப் பதியலாம்.

ஒரு ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்த பிறகு சீடியில் அந்த பைலைக் காண முடியாது. மாறாக சீடியில் வேறு சில பைல்களையும் போல்டர்களையும் மட்டுமே காணக் கூடியதாய் இருக்கும்.

ஐ.எஸ்.ஓ பைலைக் கையாளும் மூன்றாவது வL அதனை ஒரு வேர்ச்சுவல் சீடி ரொம்மில் ஏற்றிப் பார்வையிடுவதாகும். ஒரு சீடி ரொம்மிலிருந்து மட்டுமே இயங்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்களை இயக்குவதற்கான ஒரு வழியே இந்த வேர்ச்சுவல் சீடி ரொம். Virtual CD-ROM Control Panel for Windows XP என்பது அவ்வாறான ஒரு இலவச யூட்டிலிட்டி.

ஐ.எஸ்.ஓ பைல்களை உருவாக்கவும் சிடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள்களே உதவுகின்றன. ஒரு சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் டேட்டாவை ஐ.எஸ்.ஓ பைல் வடிவில் சேமித்துக் கொள்வதன் மூலம் அந்த சிடி அல்லது டிவிடி இல்லாமலேயே பிரிதொரு நேரம் அதனை சிடியில் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்த ஐ.எஸ்.ஓ பைல் தருகிறது.

நன்றி:அனுப்புடன் ஒரு வலம்

வலைப்பக்கத்தை Desktop பாக மாற்றுவது எப்படி?

நீங்கள் அனேகமாக இணையத்தில் தகவல் தேடுவதற்காக Browser ஜத் திறந்தே தேடுவது வளக்கம். இதற்குப் பதிலாக இணையப் பக்கத்தையே உங்கள் கணினியின் முகப்பாக்கி விட்டால் எவ்வளவு இலகுவாக இருக்கும். ஆனால் இவ்வாறு செய்வதற்கு அப் பக்கம் அளவு குறைந்ததாக இருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு கூகிள் தளத்தை பயன்படுத்துவது இலகு. இதற்காக நீங்கள் சிறிய HTML பைல் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கும். Notepad ஜத் திறந்து கீழே உள்ளது போல் எழுதி HTML பைலாக Save செய்துவிடுங்கள். பின்பு அதனை Desktop properties முலம் Desktop Image ஆக Select செய்து OK செய்துவிடுங்கள். இதற்கு Internet இணைப்பு அவசியம்.

Coding:



src ="http://www.google.com"
width="100%" height="100%">


குறிப்பு: எனது பக்கத்தில் HTML Tags ஜப் போட முடியவில்லை.

உங்கள் எழுத்துக்களை Backward ஆக மாற்றிப் பெற

நீங்கள் விரும்பும் எழுத்துக்களை எழுதிவிட்டு அதனை பின்வளமாக(backward) மாற்ற விரும்பினால் இங்கே சென்று மாற்றிப் பாருங்கள்

விரும்பிய Format க்கு பைல்களை மாற்றுதல்

நீங்கள் விரும்பும் அனைத்து பைல்களையும் ஒன்லைனில் வைத்தே விரும்பிய Format மாற்றிக் கொள்ளலாம் இது முற்றிலும் இலவசமானதும் கூட. நீங்கள் எவ்வித மென்பொருளையும் உங்கள் கணினியில் நிறுவத் தேவை இல்லை.

சென்று செய்து பாருங்கள்...

Folder மறைக்க வித்தியாசமாக ஒரு முறை

நாம் அனேகமாக விண்டோசில் ஒரு Folder ஜ மறைத்து வைக்க வேண்டுமாயின் அதை படம் 01 இல் உள்ளது போல் Right click -> properties -> Hidden என்பதை தெரிவு செய்தே மறைப்பது வழக்கம்

படம் 01

ஆனால் இங்கே சற்று வித்தியாசமான முறைமூலம் ஒரு

Folder ஜ மறைத்திருக்கிறேன். இதேபோல செய்து Foldder ஜ மறைத்துப் பாருங்கள்.
படிமுறை 01:

முதலில் படம் 02 ல் உள்ளது போல ஒரு Notepad ஜ திறந்து வைத்துக்njnn கொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தில் பச்சை சதுரத்தால் காட்டப்பட்டுள்ளதே Notepad ஆகும்.
ஓபன் செய்ய: start – programs – Accessories –Notepad ல் வைத்து கிளிக் செய்து open செய்யலாம்.


படம் 02

படிமுறை 02:திறந்துள்ள Notpad ல் கீழே உள்ள Coding ஜ எழுதுங்கள். அல்லது இதை Copy செய்து Notepad ல் Paste செய்யுங்கள்.

Coding:

cls

@ECHO OFF

title Folder Locker

if EXIST "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}" goto

UNLOCK

if NOT EXIST Locker goto MDLOCKER

:CONFIRM

echo Are you sure u want to Lock the folder(Y/N)

set/p "cho=>"

if %cho%==Y goto LOCK

if %cho%==y goto LOCK

if %cho%==n goto END

if %cho%==N goto END

echo Invalid choice.

goto CONFIRM

:LOCK

ren Locker "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}"attrib +h +s "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}"echo Folder locked

:UNLOCK

echo Enter password to Unlock folder

set/p "pass=>"

if NOT %pass%==type your password here goto FAIL

attrib -h -s "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}"ren "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}" Lockerecho Folder Unlocked successfully

goto End

:FAIL

echo Invalid password

goto end

:MDLOCKER

md Locker

echo Locker created successfully

goto End

:End

படிமுறை 03:

இப்போது உங்கள் Notepad கீழே படம் 03 ல் உள்ளதைப்போல காணப்படும்.


அடுத்ததாக File Menu இலுள்ள Save as என்பதன் முலம் Save செய்யுங்கள்.


படம் 04 ல் உள்ளதைப் போல உங்களுக்கு விருப்பமான பெயரில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் Save செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் Save செய்யும் பெயருடன் .bat என்று சேர்த்து எழுதுங்கள். இங்கே பெயர் மாறுபட்டாலும் அடுத்து வரும் .bat என்பதே முக்கியமாகும்.இங்கே நான் எனது பெயரிலேயே Desktop ல் Save செய்கிறேன்.

படிமுறை 04:
அடுத்து நீங்க Save செய்த File படம் 05 ல் உள்ளதைப் போல காணப்படும்.

படம் 05

அதை Double Click செய்யுங்கள்.

இப்போது படம் 06 ல் உள்ளதைப்போல பழைய File ற்கு அருகிலேயே Locker என்னும் பெயருடன் புதிதாக ஒரு File உருவாகுவதைக் காணலாம்





படம் 06

இனி நீங்கள் உங்களுடைய பிற File களை அப் Folder ற்குள் இட்டுவிட்டு மறுபடியும் முதலில் உருவாக்கிய File ஜ Double click செய்யுங்கள்.



இப்போது படம் 07 ல் உள்ளதைப் போல ஒரு dialog box தோன்றும்.


அதிலே இந்தப் Folder ஜ Lock செய்ய வேண்டுமா என கேட்கும்.நீங்கள் Y என்று டைப் செய்து Enter key ஜ அழுத்த Locker என்னும் பெயருடைய அந்தப் Folder மறைக்கப் பட்டுவிடும்.

மீண்டு Folder ஜ பெறுவதற்கு மறுபடியும் பழைய File ஜ Double click .
படம் 08 ல் உள்ளதைப்போல ஒரு Dialog box தோன்றும்.

படம் 08
அதில் ஏதாவது இலக்கத்தை டைப் செய்து Enter அழுத்த மறுபடியும் Locker என்ற Folder ஜ பெறலாம்.
Web Statistics